முதியவரிடம் ரூ. 2 லட்சம் 'அபேஸ்': ஆட்டோ டிரைவர் கைது

Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி-முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 2 லட்சம் பணம் மோசடி செய்த, ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி வினோபா நகர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராகினி, 80; இவரது கணவர் புத்துப்பட்டான், 84; வயது முதிர்வு காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ், 38; உதவியுடன் வங்கிக்கு சென்று வந்தார்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகினி

புதுச்சேரி-முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 2 லட்சம் பணம் மோசடி செய்த, ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி வினோபா நகர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராகினி, 80; இவரது கணவர் புத்துப்பட்டான், 84; வயது முதிர்வு காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ், 38; உதவியுடன் வங்கிக்கு சென்று வந்தார்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகினி மற்றும் புத்துப்பட்டான் வங்கி கணக்கில் இருந்து பென்ஷன் தொகைகள் மாயமாகி வந்தது.இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த புத்துப்பட்டான், தனது வங்கி கணக்கில் இருந்து பணம் மற்றும் வீட்டில் 10 சவரன் நகையை காணவில்லை என கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வினோபா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புத்துப்பட்டான் மொபைல்போனில் கூகுள்பே அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம், அவரது வங்கிக்கணக்கிலிருந்து தனது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி ரூ. 2 லட்சம் வரை எடுத்துள்ளது தெரிய வந்தது.அதையடுத்து, ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X