பொது செய்தி

இந்தியா

பிரஞ்சு கோன்சல் ஜெனரல் தமிழிசை சந்திப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி கவர்னர் தமிழிசையை, பிரஞ்சு கோன்சல் ஜெனரல் சந்தித்து பேசினார்.சென்னை மற்றும் புதுச்சேரிக்கான பிரஞ்சு கோன்சல் ஜெனரல் லிசே தல்போ பர்ரே, நேற்று புதுச்சேரி கவர்னர் தமிழிசையை, கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்.அப்போது, புதுச்சேரிக்கும் பிரான்சு நாட்டிற்கும் இடையிலான பண்பாட்டு பாரம் பரிய உறவுகள், கலாசார பரிவர்த்தனைக்கான வாய்ப்புகள்,
 பிரஞ்சு கோன்சல் ஜெனரல் தமிழிசை சந்திப்பு

புதுச்சேரி-புதுச்சேரி கவர்னர் தமிழிசையை, பிரஞ்சு கோன்சல் ஜெனரல் சந்தித்து பேசினார்.சென்னை மற்றும் புதுச்சேரிக்கான பிரஞ்சு கோன்சல் ஜெனரல் லிசே தல்போ பர்ரே, நேற்று புதுச்சேரி கவர்னர் தமிழிசையை, கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்.அப்போது, புதுச்சேரிக்கும் பிரான்சு நாட்டிற்கும் இடையிலான பண்பாட்டு பாரம் பரிய உறவுகள், கலாசார பரிவர்த்தனைக்கான வாய்ப்புகள், புதுச்சேரியில் பிரஞ்சு கல்வியை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றிணைந்து செயல்படுவது, புதுச்சேரி கடற்கரை சுற்றுலா வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயல்படுவது, புதுப்பிக்கவல்ல எரிசக்தி, சூரிய எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் மேலாண்மை துறை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் குறித்து கலந்துரையாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X