பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் பண்டிகை எதிரொலி காய்கறி விலை அதிகரிப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : சரஸ்வதி, ஆயுத பூஜையால், காய்கறி விலை உயர்ந்துள்ளது.அதன்படி, கடந்த வாரம் கிலோ, 20 ரூபாய் இருந்த உருளை கிழங்கு தற்போது, 35 ரூபாய். ஒரு மாதமாக வெங்காயம் விலை உயராமல் கிலோ, 20 ரூபாய். மொத்த விலையில், ஐந்து கிலோ, 100 ரூபாய் என விற்கப்பட்டு வந்தது. பலரும் வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வராமல் பட்டறைகளில் இருப்பு வைக்க துவங்கியதால், செயற்கை தட்டுப்பாடு உருவானது.வரத்து
 தொடர் பண்டிகை எதிரொலி காய்கறி விலை அதிகரிப்பு

திருப்பூர் : சரஸ்வதி, ஆயுத பூஜையால், காய்கறி விலை உயர்ந்துள்ளது.அதன்படி, கடந்த வாரம் கிலோ, 20 ரூபாய் இருந்த உருளை கிழங்கு தற்போது, 35 ரூபாய். ஒரு மாதமாக வெங்காயம் விலை உயராமல் கிலோ, 20 ரூபாய். மொத்த விலையில், ஐந்து கிலோ, 100 ரூபாய் என விற்கப்பட்டு வந்தது.
பலரும் வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வராமல் பட்டறைகளில் இருப்பு வைக்க துவங்கியதால், செயற்கை தட்டுப்பாடு உருவானது.வரத்து குறைந்ததால், நேற்று சின்னவெங்காயம், 30 மற்றும் பெரிய வெங்காயம், 35 ரூபாய்க்கும் விற்றது. ஆயுதபூஜையை முன்னிட்டு கடை வீதிகளில் தேங்காய் விற்பனை சூடுபறக்கிறது. பலரும் தேங்காய் வாங்க போட்டி போடுவதால், விலை உயர்ந்துள்ளது.

தேங்காய் பெரியது, 25, நடுத்தரம், 18, சிறியது, 14 ரூபாய்க்கு விற்றது.பச்சை மிளகாய் - 25, கத்தரி - 40, மேராக்காய் - 20, பீட்ரூட் - 35, முருங்கை - 50, சுரைக்காய் - 20, புடலங்காய் - 25, பாகற்காய் - 35, முள்ளங்கி - 20 ரூபாய்க்கு விற்றது. மலைகாய்கறி வரத்து சீரான போதும் வாங்கி செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கடந்த வாரம், 40 ரூபாய் இருந்த பீன்ஸ் நேற்று, 60 ரூபாயானது.மழை சற்று இடைவிட்டதால், தக்காளி அழுகல் அதிகமாகி விட்டது. வரத்து பாதியாக குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X