பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்புகளுக்கான பாடத் திட்டங்கள்: பங்காரம் லட்சுமி கல்லூரியின் சிறப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான பாடத்திட்டங்களைக் கொண்டு, பங்காரம் லட்சுமி கல்வி நிறுவனம் செயல்படுகிறது.கல்லுாரி தலைவர் மணிவண்ணன், செயலாளர் முருகப்பன் கூறியதாவது:சாதனைகள் படைப்போம், சமுதாயத்தை உயர்த்துவோம் என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரத்தில் லட்சுமி ஹயக்கிரிவாஸ் கல்வி அறக்கட்டளை

கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான பாடத்திட்டங்களைக் கொண்டு, பங்காரம் லட்சுமி கல்வி நிறுவனம் செயல்படுகிறது.கல்லுாரி தலைவர் மணிவண்ணன், செயலாளர் முருகப்பன் கூறியதாவது:சாதனைகள் படைப்போம், சமுதாயத்தை உயர்த்துவோம் என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரத்தில் லட்சுமி ஹயக்கிரிவாஸ் கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டது.வேலை வாய்ப்புக்கு ஏற்ற பாடப்பிரிவுகளைக் கொண்டு ஸ்ரீலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி, ஸ்ரீலட்சுமி கல்வியியல் கல்லுாரி இயங்கி வருகிறது.இக்கல்லுாரியில் பல்கலைப் பாடத்திட்டத்துடன், பல்வேறு துறை சார்ந்த நடைமுறை கல்வியை வல்லுநர்களைக் கொண்டு தேசிய அளவிலான கருத்தரங்கமும் நடத்தப்படுகிறது.வேலை வாய்ப்பிற்கு உதவும் வகையில் டேலி, பேங்க்கிங் அண்ட் பைனான்ஸ், ஆப்டிகல் பைபர் நெட்ஒர்க்கிங் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி, கணினி, வேதியியல், இயற்பியல் ஆய்வகங்கள், மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த யோகா, சாப்ட் ஸ்கில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.தேர்வில் முதலிடம் பெறுவதுடன், பல்கலை தரவரிசை பட்டியலில் இடம்பிடித்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைக்கின்றனர்.விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கோ-கோ, கபடி, செஸ், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 12ம் வகுப்பிலும், இளங்கலை தேர்விலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. விரைவில் தன்னாட்சி பெறும் கல்வி நிறுவனமாக உருவெடுக்கும்.இவ்வாறு மணிவண்ணன், முருகப்பன் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X