பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் நலனில் அக்கறை, ஜே.எஸ்., பள்ளியின் கடமை; தாளாளர் செந்தில்குமார் பெருமிதம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி, நீலமங்கலம் அருகே உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் கூறியதாவது:கடந்த 2018- 2019ம் கல்வியாண்டில் துவங்கிய ஜே.எஸ்., பள்ளி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதப்படி வகுப்பு நடக்கிறது.மாணவர்களின் கல்வித்திறனை மென்மேலும் ஊக்குவிக்க மொழி, அறிவியல், கணினி மற்றும்

கள்ளக்குறிச்சி, நீலமங்கலம் அருகே உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் கூறியதாவது:கடந்த 2018- 2019ம் கல்வியாண்டில் துவங்கிய ஜே.எஸ்., பள்ளி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதப்படி வகுப்பு நடக்கிறது.மாணவர்களின் கல்வித்திறனை மென்மேலும் ஊக்குவிக்க மொழி, அறிவியல், கணினி மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள், நுாலகம் ஆகியவை உள்ளது. ஸ்மார்ட் போர்டில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நீட் நுழைவுத் தேர்வுகளுக்கு 6ம் வகுப்பு முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.தனித்திறனை மேம்படுத்த பரதம், மேற்கத்திய நடனம், நீச்சல், இசை வகுப்பு, ஸ்கேட்டிங், கராத்தே, யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் மிக சரியான முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.தற்போது கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தமான முறையில் பராமரித்து வருகிறோம். மாணவர்கள் பள்ளி வளாகத்தினுள் நுழைந்ததும், கிருமிநாசினி வழங்கி, உடல் வெப்பநிலை, பல்ஸ் ஆக்சி மீட்டர் ஆகியவை மூலம் பரிசோதனை செய்யப்படும்.மாணவர்களின் உடல் நிலையில் பிரச்னை ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க செவிலியரை நியமித்துள்ளோம். ஒரு வகுப்பறையில் 10 மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படுகின்றனர். மாணவர்களின் உடல் நலனே முக்கியம்.பள்ளிகள் திறந்த பின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வித தயக்கமுமின்றி பள்ளிக்கு அனுப்பலாம். ஆரோக்கியம் மற்றும் தரமான உணவுகள் வழங்கப்படுகிறது.இவ்வாறு தாளாளர் செந்தில்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X