பொது செய்தி

தமிழ்நாடு

அரசு சுவர்களில் விளம்பரங்கள் அத்துமீறலுக்கு அளவே இல்லை

Added : அக் 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், வாகன போக்குவரத்துக்கு நடுவே, அரசு சுவரில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதால், விபத்து அபாயம் நிலவுகிறது.பொள்ளாச்சி நகரின் நெரிசலை குறைக்க, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, சென்டர் மீடியன், ரவுண்டானா உள்ளிட்ட கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்தையும், ஒன்று விடாமல் அரசியல் கட்சியினர் விளம்பரம்
 அரசு சுவர்களில் விளம்பரங்கள் அத்துமீறலுக்கு அளவே இல்லை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், வாகன போக்குவரத்துக்கு நடுவே, அரசு சுவரில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதால், விபத்து அபாயம் நிலவுகிறது.

பொள்ளாச்சி நகரின் நெரிசலை குறைக்க, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, சென்டர் மீடியன், ரவுண்டானா உள்ளிட்ட கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்தையும், ஒன்று விடாமல் அரசியல் கட்சியினர் விளம்பரம் எழுதியும், போஸ்டர் ஒட்டியும் சீரழிக்கின்றனர்.பொதுச்சொத்தை சீரழிப்பது மட்டுமின்றி, பட்டப்பகலிலில் வாகன போக்குவரத்து மிக்க ரோட்டில், அரசு கட்டுமானங்களில் அரசியல் விளம்பரம் எழுதும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் நிலவுகிறது.

தொழிலாளர்களின் பாதுகாப்பு, பொதுச் சொத்தை அத்துமீறி அலங்கோலம் செய்வது குறித்தெல்லாம் சிறிது கூட கவலையின்றி, உள்ளூர் அரசியல் கட்சியினர் செயல்படுகின்றனர். இதையெல்லாம், கண்டும் காணாமலும் அதிகாரிகள் இருப்பதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இந்த அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் பொறுப்பும், அதிகாரமும் சப் - கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் நகராட்சி கமிஷனருக்கு உள்ளது. இனியாவது, அதிகாரத்தை கையில் எடுத்து, அரசியல் கட்சியினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X