வளர்ச்சிப் பாதையில் விழுப்புரம் வடக்கு மாவட்டம்- அமைச்சர் மஸ்தான் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சிப் பாதையில் விழுப்புரம் வடக்கு மாவட்டம்- அமைச்சர் மஸ்தான் பெருமிதம்

Added : அக் 14, 2021
Share
செஞ்சி-'ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் பல நுாறு கோடிக்கு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதால் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மிகப்பெரும் வளர்ச்சி பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது' என அமைச்சர் மஸ்தான் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள நல திட்டங்களால் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இந்திய அளவில்

செஞ்சி-'ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் பல நுாறு கோடிக்கு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதால் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மிகப்பெரும் வளர்ச்சி பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது' என அமைச்சர் மஸ்தான் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள நல திட்டங்களால் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இந்திய அளவில் பாராட்டப்படும் ஒரே முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.உழவர்களைப் பாதுகாக்க உழவர்களுக்கு தனி பட்ஜெட், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியான நடவடிக்கை, மகளிர் மேம்பாட்டிற்கு புதிய திட்டங்கள் கொண்டு வந்துள்ளார்.இதற்கு மக்களின் நல்லாதரவு இருப்பதற்கு உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை தந்துள்ள மக்களே சாட்சியாக உள்ளனர்.விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் 4 மாதத்தில் பல நுாறு கோடி ரூபாயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.திண்டிவனத்தில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. 10 ஆயிரம் படித்த இளைஞர்கள் நேரடி வேலை வாய்ப்பும், 10 ஆயிரம் பேர் மறைமுக வேலைவாய்ப்பும் பெறும் வகையில் திண்டிவனம் அருகே சிப்காட் தொழில் மையம் அமைய உள்ளது.திண்டிவனத்தில் உழவர் சந்தைக்கான கட்டுமானப்பணி நடக்கிறது. அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது. வீடூர் அணையை ஆழப்படுத்தி, புனரமைப்பு செய்யும் பணி நடக்கிறது.செஞ்சி பகுதியில் விரைவில் அரசு கல்லுாரி அமைய உள்ளது. மரக்காணம் எக்கியார்குப்பம் மீன் இறங்கு தளம் மேம்பாட்டு பணிகள் மற்றும் அனுமந்தை கிராமத்தில் புதிய மீன் இறங்கு தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மேம்பாட்டு பணிக்காக 2.50 கோடி ரூபாய் நிதியும், சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் செல்ல மலைப்பாதை மற்றும் சமுதாய கூடம் அமைக்க மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேல்மலையனுார், வல்லத்தில் புதிய வேளாண் விரிவாக்க மையம் அமைய உள்ளது. சத்தியமங்கலத்தில் 1.62 கோடி ரூபாய் மதிப்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டி வருகின்றனர்.எதப்பட்டு, அணையேரி, வல்லம், அனந்தபுரம், மரக்காணம், செண்டூர், ஜக்காம்பேட்டை ஆகிய 7 இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைய உள்ளது. இந்த திட்டங்கள் மூலம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் இதுவரை காணாத மிகப்பெரும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.இவ்வாறு அமைச்சர் மஸ்தான் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X