பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் மலர் - நகராட்சி கனவுடன் அவிநாசி!

Added : அக் 14, 2021
Share
Advertisement
'மிகக்குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி' என்பது, பல இடங்களில் சாத்தியமில்லாத விஷயம். ஆனால், கால மாற்றம், சில இடங்களில் அதை சாத்தியமாக்கி விடுகிறது.இதற்கு உதாரணமாக, அவிநாசி நகரை சொல்லலாம்.கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு என, நான்கு புறமும், பணம் புரளும் தொழில் நகரங்கள் சூழ்ந்த பகுதி அவிநாசி. மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், 3வது பெரிய தொகுதி என்ற பெருமையும் உண்டு.

'மிகக்குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி' என்பது, பல இடங்களில் சாத்தியமில்லாத விஷயம். ஆனால், கால மாற்றம், சில இடங்களில் அதை சாத்தியமாக்கி விடுகிறது.

இதற்கு உதாரணமாக, அவிநாசி நகரை சொல்லலாம்.கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு என, நான்கு புறமும், பணம் புரளும் தொழில் நகரங்கள் சூழ்ந்த பகுதி அவிநாசி. மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், 3வது பெரிய தொகுதி என்ற பெருமையும் உண்டு. திருப்பூரில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பை பெறும் நோக்கில் பிற மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து, இடம் பெயர்ந்து வந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டியுள்ளது.

நகரமயமாதலை நோக்கி...அவிநாசி பேரூராட்சி பகுதியில் மட்டும் கடந்த, 2011 கணக்கெடுப்புப்படி, மக்கள் தொகை, 28 ஆயிரத்து 868 பேர். 'சிறப்பு நிலை அந்துஸ்து பெற்ற இப்பேரூராட்சியின் மக்கள் தொகை, தற்போது, 40 ஆயிரத்தை கடந்திருக்கும்; அவிநாசிக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை மட்டும், தினசரி, 10 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது' என்கின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.விவசாயம், பனியன் தொழில், ஜாப் ஒர்க், மரம் சார்ந்த தொழில் என, பலதரப்பட்ட தொழில் நிறைந்த அவிநாசியில், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப ரியல் எஸ்டேட் வர்த்தகமும் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது ;

அத்தொழிலிலில், காலடி எடுத்து வைப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.புதிதாக வீடுகளை கட்டுவோர், பழைய வீடுகளை வாங்கி 'செட்டில்' ஆவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆக, நகரமயமாதலை நோக்கி, அவிநாசி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்வதில் மிகையில்லை.அத்தியாவசிய தேவையான தண்ணீருக்கு ஏற்பட்டிருக்கிற தட்டுப்பாடும். சாலை, வீதிகளில் காணப்படும் நெரிசல், புதிது, புதிதாய் முளைக்கும் கடைகள், வர்த்தக நிறுவனங்களுமே இதற்கு சாட்சி.வளர்ச்சிக்கு என்ன வழி?ஆக, நகரத்துக்கு இணையான வளர்ச்சி வேண்டும் என்பது தான், அவிநாசி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு. இதற்கு, அவிநாசி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற குரல், நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.மொத்தம், 11.65 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட அவிநாசியில், 10 ஆயிரத்து 707 குடும்பங்கள் உள்ளன. தபால் நிலையம், மின்வாரிய அலுவலகம், நூலகம், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், வணிகவரி அலுவலகம் உள்ளிட்ட, 19 அரசு அலுவலகங்கள் உள்ளன. தாலுகா அந்தஸ்து பெற்ற அரசு மருத்துவமனை, 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அவற்றின் கட்டுப்பாட்டில் துணை சுகாதார நிலையங்கள் என, பட்டியல் நீள்கிறது.தினசரி சந்தை, வார சந்தை, பஸ் ஸ்டாண்ட், இறைச்சிக்கூடம். சைக்கிள் ஸ்டாண்ட், இறைச்சி வதைக்கூடம் என, நகரத்துக்கு இணையான கட்டமைப்புகளும் இங்குள்ளன. நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள அருகேயுள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சி வாழ் மக்கள் கூட, தங்களின் பல்வேறு தேவை சார்ந்து, அவிநாசிக்கு தான் வந்து செல்கின்றனர்.

சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வருவாய் இனங்கள் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது. கடந்த, 2018- 2019ல், 5.67 கோடி ரூபாயாக இருந்த வரி வருவாய், நடப்பாண்டு, 6.39 கோடியாக உயர்ந்திருக்கிறது.ஆக. நகரத்துக்கு இணையான கட்டமைப்பு, வருவாயை கொண்ட அவிநாசியை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதும், நகரத்துக்கு இணையான கட்டமைப்பு, குடிநீர் தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதும் தான், அவிநாசி மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X