பொது செய்தி

தமிழ்நாடு

ஏழை மாணவர்களுக்காக பாடுபடும் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஏழை. எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆலம்பூண்டியில் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.ஸ்ரீரங்க பூபதி கலை அறிவியல் மற்றும்

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஏழை. எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆலம்பூண்டியில் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.ஸ்ரீரங்க பூபதி கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரியில் 4 ஆண்டு பட்டயப் படிப்பான பி.எஸ்சி., பி.எட்., தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்க பூபதி பி.எட்., கல்லுாரி, ஸ்ரீரங்க சின்னம்மாள் பி.எட்., எம்.எட்., கல்லுாரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லுாரியில் முதல் பட்டதாரி, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை பெற்று தந்து இலவசமாக படித்து வருகின்றனர்.தமிழகத்தில் 30 சதவீதத்திற்கு மேல் மாணவர் சேர்க்கை உள்ள கல்லுாரிகளின் பட்டியலில் ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லுாரி முக்கிய இடம் பெற்றுள்ளது. மேலும் ஒரு படிக்கல்லாக பாலிடெக்னிக் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது.ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி மருத்துவமனை 500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக செயல்படுகிறது. இங்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறோம். ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரியில் மத்திய, மாநில அரசு அனுமதியுடன் பி.எஸ்சி., நர்சிங் மாணவர்கள் 100 பேர் படிக்கின்றனர். பார்மசி கல்லுாரியில் பி.பார்ம்., டி.பார்ம்., மாணவர்கள் படித்து வருகின்றனர்.இங்கு பயிலும் பொறியியல், பாலிடெக்னிக், நர்சிங், பார்மசி மாணவர்கள் கல்லுாரி மூலம் வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர்.2019 - 2020 கல்வியாண்டில் இந்திய நர்சிங் கவுன்சில், மாநில அரசின் அனுமதி பெற்று துவங்கிய ஏ.என்.எம்., நர்சிங் பாடப்பிரிவுகள் மற்றும் பி.பார்மசி நான்கு ஆண்டு படிப்பு, எம்.எல்.டி., படிப்பும் நடக்கிறது. சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகிறது. ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனம் பாடுபடும்.இவ்வாறு தாளாளர் ரங்கபூபதி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X