பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.75 கோடியில் வேளாண் அலுவலகம் கட்டுமான பணி நிறைவடைந்து காத்திருப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், 1.75 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் அலுவலகம் திறப்புக்கு தயாராக உள்ளது.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வேளாண்மை அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகியன செயல்படுகின்றன. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, கருங்கல் கட்டடத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன.கடந்த சில
 ரூ.1.75 கோடியில் வேளாண் அலுவலகம்   கட்டுமான பணி நிறைவடைந்து காத்திருப்பு


கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், 1.75 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் அலுவலகம் திறப்புக்கு தயாராக உள்ளது.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வேளாண்மை அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகியன செயல்படுகின்றன.

கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, கருங்கல் கட்டடத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெய்த பலத்த மழையால், கட்டடத்தின் மேற்பகுதி உறுதி இழந்து, மழை நீர் கட்டடத்துக்குள் கசிந்தது. இதன்விளைவாக, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், ஒன்றியத்துக்கு சொந்தமான கட்டடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன.கடந்த ஓராண்டுக்கு முன், 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்கள் கட்டும் பணி துவங்கியது. இக்கட்டடத்தில், அலுவலகங்கள், உரக்கிடங்குக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.கட்டி முடிக்கப்பட்டு இக்கட்டடம், எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இதுபற்றி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசாரித்தபோது, கட்டுமானப்பணி முடிந்து விட்டது. தற்போது, குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி முடிவுக்கு வந்தததும் இணைப்பு வழங்கப்பட்டு, வேளாண்துறையிடம் ஒப்படைக்கப்படும்.அதன்பின், கட்டட திறப்பு விழா குறித்த தேதி அறிவிக்கப்படும். முதல்வர் அல்லது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கட்டடத்தை திறக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X