பொது செய்தி

தமிழ்நாடு

வானூரில் நேற்று காலை வரை ஓட்டு எண்ணிக்கை

Added : அக் 14, 2021
Share
Advertisement
வானுார்-வானுாரில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை வரை நீடித்தது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து, நேற்று முன்தினம் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. வானுார் ஒன்றியத்தில் போட்டியிட்டவர்களின் ஓட்டுக்கள் எண்ணும் பணி, சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு மேல் துவங்கிய ஓட்டு

வானுார்-வானுாரில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை வரை நீடித்தது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து, நேற்று முன்தினம் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. வானுார் ஒன்றியத்தில் போட்டியிட்டவர்களின் ஓட்டுக்கள் எண்ணும் பணி, சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு மேல் துவங்கிய ஓட்டு எண்ணிக்கையின்போது, கட்சியினருக்குள் அடிக்கடி சிறு சிறு பிரச்னைகள் எழுந்தது.குறிப்பாக ஒரே சீட்டில் 2 முத்திரைகள் பதித்த ஓட்டுகள் அடிக்கடி வந்ததால் அவ்வப்போது ஓட்டு எண்ணுவதில் தடங்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு சுற்றும் எண்ணி முடிப்பதற்கு காலதாமதம் ஆனது.நேற்று முன் தினம் துவங்கிய ஓட்டு எண்ணிக்கை பணி, நேற்று காலை 6:00 மணி வரை விடிய விடிய நடந்து முடிந்தது. இதனால், வேட்பாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X