பொது செய்தி

தமிழ்நாடு

விஜயதசமி மலர்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கலைமகளின் அருள்பெறும் நாளான சரஸ்வதி பூஜை இன்றும்(14 ம் தேதி), வெற்றித்திருநாளான விஜயதசமி நாளையும் கொண்டாடப்படுகிறது.நவராத்திரி நாட்களில் பிரதமை முதல் நவமி வரை எப்படி முறைப்படி வழிபட வேண்டும் என்று ஞானநுால்கள் விளக்குகின்றன; முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபட்டு வேண்டிய

கலைமகளின் அருள்பெறும் நாளான சரஸ்வதி பூஜை இன்றும்(14 ம் தேதி), வெற்றித்திருநாளான விஜயதசமி நாளையும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் பிரதமை முதல் நவமி வரை எப்படி முறைப்படி வழிபட வேண்டும் என்று ஞானநுால்கள் விளக்குகின்றன; முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபட்டு வேண்டிய அருள் பெறலாம்.சரஸ்வதி பூஜை தினமான இன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜை மேடையில் வெண்மையான துணி விரித்து, அதன் மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, மாவிலைகளை மேலே வைத்து, பூஜையைத் துவங்க வேண்டும்.

தினமும் நமது பணிக்குஉபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங் களையும் பூஜையில் வைத்து வழிபடுவது சிறப்பு.குழந்தைகளின் பாடப்புத்தகங்களையே மேடையாக அடுக்கி8, அதன் மீது அன்னையை எழுந்தருளச் செய்யும் வழக்கமும் உண்டு. சிலர், சரஸ்வதிதேவியின் திருமுன் புத்தகங்களை அடுக்கிவைப்பதுண்டு.எல்லாம் தயார் செய்தபிறகு, பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் குற்றம் குறைகள் இருப்பின் பொறுத்தருளும் படி மனதார வேண்டியும் உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்கவேண்டும்.

பின்னர் முறைப்படி துாப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும். நெய்வேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா போன்றவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்தும் வழிபடவேண்டும்.இனி, நமக்கு எல்லா நாட்களும் வெற்றித் திருநாளாக அமைய வேண்டும்!மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாய்விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X