பொது செய்தி

தமிழ்நாடு

அள்ளியது: மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க.,...இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது அ.தி.மு.க.

Added : அக் 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில், மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க., பெரும்பான்மையான இடங்களில் கைப்பற்றியது.அ.தி.மு.க., இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 293, கிராம ஊராட்சித் தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில், மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க., பெரும்பான்மையான இடங்களில் கைப்பற்றியது.

அ.தி.மு.க., இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 293, கிராம ஊராட்சித் தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 5,088 என மொத்தம் 6,097 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதில், 22 கிராம ஊராட்சித் தலைவர், 357 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 5,715 பதவிகளுக்கு 19,982 பேர்போட்டியிட்டனர்.மாவட்டத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தி.மு.க., 27, அ.தி.மு.க., 24, பா.ம.க., 14, நாம் தமிழர் கட்சி 13, பா.ஜ., 3, பகுஜன் சமாஜ் கட்சி 9, தே.மு.தி.க., 20, அ.ம.மு.க., 10, ஆம் ஆத்மி 2 இடங்களில் போட்டியிட்டது.இதேபோன்று, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., 244 இடங்களிலும், அ.தி.மு.க., 262 இடங்களிலும், பா.ம.க., 1 இடத்திலும் போட்டியிட்டது. இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை மாவட்டத்தில் 13 மையங்களில் நேற்று முன்தினம் துவங்கி, நேற்று வரை நடந்தது.நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கை இரவு 8:00 மணி வரை மந்தமாக நடந்தது.அப்போது, வரை ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும், ஒரு சில இடங்களில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.இரவு 10:00 மணிக்குமேல் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 28 மாவட்ட கவுன்சிலர்களில் 27 இடங்களில் தி.மு.க.,வும், அ.தி.மு.க., 1 இடத்திலும் வெற்றி பெற்றது. 293 ஒன்றிய கவுன்சிலர்களில் 199 இடங்களில் தி.மு.க.,வும், 46 இடங்களில் அ.தி.மு.க.,வும், 13 இடங்களில் பா.ம.க.,வும், 10 இடங்களில் வி.சி.,யும், 20 இடங்களில் சுயேச்சையும், 3 இடங்களில் காங்., மற்றும் இந்திய கம்யூ., மற்றும் ம.தி.மு.க., தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றது.மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ள தி.மு.க., உள்ளாட்சி நிர்வாகத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த உள்ளது. இதனால், அ.தி.மு.க., இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
,-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X