பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் குறைந்ததால் நிம்மதி

Added : அக் 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, நான்கு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. வடக்கு வட்டாரம் ஜமீன் காளியாபுரத்தில் ஒருவர்; தெற்கு வட்டாரத்தில் கோமங்கலம், நாயக்கன்பாளையம் பகுதிகளில் தலா ஒருவர், என மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கிணத்துக்கடவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, நான்கு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

வடக்கு வட்டாரம் ஜமீன் காளியாபுரத்தில் ஒருவர்; தெற்கு வட்டாரத்தில் கோமங்கலம், நாயக்கன்பாளையம் பகுதிகளில் தலா ஒருவர், என மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கிணத்துக்கடவு தாலுகாவில், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த, ஒருவருக்கு தொற்று பரவல் உறுதியானது. ஆனைமலை, வால்பாறை தாலுகாவில், நேற்று, யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை.வருவாய் கோட்டத்தில், நேற்று, மொத்தம், நான்கு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. கடந்த ஒரு மாதமாக, அதிகப்படியான நபர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்று பாதிப்பு குறைவாகவே பதிவாகி வருகின்றது. இதனால், பொதுமக்கள், சுகாதாரத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X