பொது செய்தி

தமிழ்நாடு

பெரியதச்சூரில் கடையடைப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-பெரியதச்சூரில் தேர்தல் தகராறில் கடையடைப்பு நடந்தது.மயிலம் ஒன்றிய தேர்தலில் பெரியதச்சூர் ஊராட்சியில் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால் காலனி பகுதியில் இருந்து 6 பேர் போட்டியிட்டனர்.இதில் புதுார் கிராம ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த கணேசன் என்பவர் கிராம மக்கள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.காலனி பகுதியில் வசிக்கும்

விக்கிரவாண்டி-பெரியதச்சூரில் தேர்தல் தகராறில் கடையடைப்பு நடந்தது.மயிலம் ஒன்றிய தேர்தலில் பெரியதச்சூர் ஊராட்சியில் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால் காலனி பகுதியில் இருந்து 6 பேர் போட்டியிட்டனர்.இதில் புதுார் கிராம ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த கணேசன் என்பவர் கிராம மக்கள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.காலனி பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் தேர்தலில் அதிகளவு செலவு செய்து தோல்வி அடைந்ததால், நேற்று பெரியதச்சூர் மந்தக்கரை கடை வீதி பகுதிக்கு தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் திரண்டு பிரச்னை செய்தனர்.மேலும், எஸ்.சி., என போலியான ஜாதிச்சான்று வாங்கி அவரை தேர்தலில் நிற்க வைத்து ஊர் பகுதியில் வசிப்பவர்கள் ஆதரவு அளித்தீர்களா எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால், அச்சமடைந்த வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் பரணிநாதன், தாசில்தார் செல்வம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கையை மனுவாக அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் காலனி தரப்பினர் கலைந்து சென்றனர். பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X