சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோல்வியடைந்த நபரின் பெயரை ஆன்லைனில் பதிவு செய்ததால் மறியல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே ஊராட்சித் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவரின் பெயரை ஆன்லைன் ஏற்றாமல் தோல்வியடைந்தவரின் பெயரை பதிவேற்றம் செய்ததால் சாலை மறியல் நடந்தது.உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கிளியூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அலமேலு

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே ஊராட்சித் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவரின் பெயரை ஆன்லைன் ஏற்றாமல் தோல்வியடைந்தவரின் பெயரை பதிவேற்றம் செய்ததால் சாலை மறியல் நடந்தது.உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கிளியூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அலமேலு பாலு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.அப்போது தவறுதலாக கிளியூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு கொளஞ்சி வெற்றி பெற்றதாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அலமேலு பாலு தரப்பினர் நேற்று காலை 10:00 மணியளவில் உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.அப்போது ஒருவர், திடீரென கத்தியால் கிழித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜா, அந்த நபரைப் பிடித்து கத்தியை பறிமுதல் செய்தார்.பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அலமேலு பாலுவிற்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. அதன் பின் காலை 11:45 மணியளவில் மறியலை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X