பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர போராட்ட வீரருக்கு மணிமண்டபம் அமைக்க ஆய்வு

Added : அக் 14, 2021
Share
Advertisement
உடுமலை : திருப்பூர், உடுமலை தளியை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த பாளையக்காரர், வம்சாவளியில், ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய, சுதந்திர போராட்ட வீரர், மலையாண்டி வேங்கடபதி எத்தலப்பருக்கு சிலை மற்றும் மணி மண்டபம் கட்டப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.இப்பணிகளுக்காக, 2.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு குறித்து, செய்தித்துறை

உடுமலை : திருப்பூர், உடுமலை தளியை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த பாளையக்காரர், வம்சாவளியில், ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய, சுதந்திர போராட்ட வீரர், மலையாண்டி வேங்கடபதி எத்தலப்பருக்கு சிலை மற்றும் மணி மண்டபம் கட்டப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இப்பணிகளுக்காக, 2.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு குறித்து, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன், கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நேற்று உடுமலையில், நடந்தது.இதில், திருமூர்த்தி அணைப்பகுதியில், காண்டூர் கால்வாய் அருகே, தற்போது, தளி பாளையப்பட்டு வரலாறுகளை விளக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் அரங்கம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், உடுமலை நகராட்சி அலுவலக புதிய கட்டடத்தின் முன் வேங்கிடபதி எத்தலப்பருக்கு சிலை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X