பொது செய்தி

தமிழ்நாடு

விஜயதசமி மலர் -

Added : அக் 14, 2021
Share
Advertisement
வீரம், கல்வி, செல்வம்நவராத்திரியில் மூன்று சக்திகளையும் வழிபடுவதனால் வீரம், கல்வி, செல்வம் என்பன வாழ்வில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.விரதகாலங்களில் உணவை விடுத்து விரதம் காப்பர். இது பசி என்ற உணர்வின் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு உணர்த்துகிறது.இந்த விரத காலங்களில் வீடுகளை துப்பரவாகவும் கோலங்கள் போட்டும் அழகாக வைத்திருப்பர். இது ஒரு அழகான

வீரம், கல்வி, செல்வம்நவராத்திரியில் மூன்று சக்திகளையும் வழிபடுவதனால் வீரம், கல்வி, செல்வம் என்பன வாழ்வில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.விரதகாலங்களில் உணவை விடுத்து விரதம் காப்பர்.

இது பசி என்ற உணர்வின் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு உணர்த்துகிறது.இந்த விரத காலங்களில் வீடுகளை துப்பரவாகவும் கோலங்கள் போட்டும் அழகாக வைத்திருப்பர். இது ஒரு அழகான வாழ்வியலை உருவாக்குகிறது.கூத்தனுார் சரஸ்வதி கோவில்திருவாரூர் மாவட்டம், கூத்தனுாரில் கல்விக்கடவுள் சரஸ்வதி கோவில் உள்ளது. இத்தலம் தட்சிணதிரிவேணிசங்கம் எனப் பெயர் பெற்றது. இவ்வூர் இரண்டாம் ராஜராஜ சோழனால் தனது அவைப்புலவரான ஓட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டதால் இவ்வூர் கூத்தனூர் என்றாயிற்று. கும்பகோணம் சாரங்கபாணி தீட்சிதர் என்பவரின் புதல்வன் வாய் பேசாதிருந்து கூத்தனுார் அம்பிகை அருளால் விஜயதசமி நன்னாளில் பேச்சுத்திறன் பெற்றதும் இத்தலத்தை திருப்பணி செய்து புருஷேத்தம்பாரதி எனப் போற்றப்பட்டதும்இத்தல மகிமையை உணர்த்தும். இத்தலத்தில் அருள்பாலித்து வரும் அன்னை சரஸ்வதி தேவியை வழிபடுவோருக்கு கல்வி அறிவு பெற்று மேன்மை அடைவர். தமிழகத்தில் சரஸ்வதிதேவிக்கு இக்கோயில் ஒன்று மட்டுமே உள்ளது.தானிய உணவு ஆரோக்கியம்சிவனை வழிபடுவது சிவராத்திரி; அம்மனை வழிபடுவது நவராத்திரி இத்திருவிழா மைசூரில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

வெயில், மழை, குளிர் என இவை மூன்றும் கலந்து இருக்கும் இந்த புரட்டாசி மாதத்தில் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியால் பூமி உட்கிரகித்து வைத்திருந்த வெப்பத்தை வெளியிடும் காலமாக இருக்கிறது. இதனால் உடலில் உஷ்ணம் அதிகமாகும். ஒன்பது நாட்களும் நவராத்திரி பூஜைக்காக நாம் செய்யும் தானியங்களால் செய்யப்பட்ட நைவேத்தியங்கள் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும், ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X