சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா

Added : அக் 14, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கல்வராயன்மலை வஞ்சிக்குழி ஊராட்சித் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க,. வேட்பாளருக்கு பதில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை கண்டித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட வஞ்சிக்குழி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் வைகேஸ்வரி ராமசாமி 1,150

கள்ளக்குறிச்சி-கல்வராயன்மலை வஞ்சிக்குழி ஊராட்சித் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க,. வேட்பாளருக்கு பதில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை கண்டித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட வஞ்சிக்குழி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் வைகேஸ்வரி ராமசாமி 1,150 ஓட்டுகள் பெற்றிருந்தார்.ஆனால் வெற்றி அறிவிப்பின்போது, அவரை விட குறைந்த ஓட்டு பெற்ற தி.மு.க., வேட்பாளர் சின்னக்கண்ணு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க., வேட்பாளர் வைகேஸ்வரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 70க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு மாலை 6:00 மணிக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாரதி, கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X