பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளின் வாகனங்கள் தணிக்கை வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை

Added : அக் 14, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளின், வாகனங்கள், வட்டார போக்குவரத்து துறையினரால், ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடுள்ள வாகனங்களை சீரமைக்க கெடு விதிக்கப்பட்டது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 25க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் சார்பில், மாணவ, மாணவியரை, அழைத்து வர இயக்கப்படும் வாகனங்கள், ஆண்டுதோறும், வட்டார போக்குவரத்துத்துறையினரால், தணிக்கை
 தனியார் பள்ளிகளின் வாகனங்கள் தணிக்கை    வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை


உடுமலை : உடுமலை பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளின், வாகனங்கள், வட்டார போக்குவரத்து துறையினரால், ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடுள்ள வாகனங்களை சீரமைக்க கெடு விதிக்கப்பட்டது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 25க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன.

இப்பள்ளிகள் சார்பில், மாணவ, மாணவியரை, அழைத்து வர இயக்கப்படும் வாகனங்கள், ஆண்டுதோறும், வட்டார போக்குவரத்துத்துறையினரால், தணிக்கை செய்யப்படுகிறது.கொரோனா ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை உட்பட காரணங்களால், பள்ளி வாகனங்கள் இயக்கப்படவில்லை; கடந்தாண்டு தணிக்கையும் கைவிடப்பட்டது.இந்நிலையில், வரும், நவ., 1ம் தேதி முதல், பள்ளிகளை திறக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பள்ளி வாகனங்களை இயக்கும் முன்பு, அவற்றின் நிலை குறித்து கண்டறிவதற்கான தணிக்கை மேற்கொள்ள, வட்டார போக்குவரத்து துறை சார்பில், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.அதன்படி, நேற்று உடுமலை நேதாஜி மைதானத்தில், சுற்றுப்பகுதிகளிலுள்ள தனியார் பள்ளிகளின், 150 வாகனங்கள், தணிக்கை செய்யப்பட்டது.தணிக்கை குழுவைச்சேர்ந்த, கோட்டாட்சியர் கீதா, தாசில்தார் தங்கவேல், டி.எஸ்.பி., தேன்மொழிவேல், கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வரம்யா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், தீயணைப்பு துறை அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். பள்ளிக்குழந்தைகள், பாதுகாப்பாக பயணிப்பதற்கான அம்சங்கள் குறித்து, இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.இதில், குறைபாடுள்ள வாகனங்களை, சீரமைத்து, 7 நாட்களுக்குள், மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, தீயணைப்புத்துறை சார்பில், வாகன ஓட்டுனர்களுக்கு, தீயை அணைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X