சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் சாலை மறியல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சங்கராபுரம்,-சங்கராபுரம் ஒன்றியம், வடகீரனுார் ஊராட்சியில் இதாயதுல்லா, பஷீர் ஆகியோர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் பஷீர் 378 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். மாலையில் 381 ஓட்டுகள் பெற்ற இதாயதுல்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முறைகேடு நடந்ததாக பஷீர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மதியம் 3:00 மணியளவில்

சங்கராபுரம்,-சங்கராபுரம் ஒன்றியம், வடகீரனுார் ஊராட்சியில் இதாயதுல்லா, பஷீர் ஆகியோர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் பஷீர் 378 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். மாலையில் 381 ஓட்டுகள் பெற்ற இதாயதுல்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முறைகேடு நடந்ததாக பஷீர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மதியம் 3:00 மணியளவில் சங்கராபுரம் ஒன்றிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தாசில்தார் பாண்டியன்,இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் திருமால், வருவாய் ஆய்வாளர் திருமலை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பேரில், 4:00 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது. மறியலால் சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X