தமிழ்நாடு

கைப்பற்றியது: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., அதிக இடங்களை...9 ஒன்றிய சேர்மன் பதவியையும் தக்க வைத்தது

Added : அக் 14, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 180 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளில் தி.மு.க., 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 16 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ளாட்சி பதவிகளுக்கு 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 412 ஊராட்சித் தலைவர்கள், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,773 பதவிகளுக்கான தேர்தல்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 180 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளில் தி.மு.க., 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 16 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ளாட்சி பதவிகளுக்கு 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 412 ஊராட்சித் தலைவர்கள், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,773 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதில், 2 மாவட்ட கவுன்சிலர், 3 ஒன்றிய கவுன்சிலர், 29 ஊராட்சித் தலைவர்கள், 454 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 488 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 3,285 உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளாக கருதப்படும் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளை பிடிப்பதற்கு தி.மு.க., - அ.தி.மு.க., வினரிடையே பல இடங்களில் நேரடி போட்டி நிலவியது.பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. மேலும், தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்., - ம.தி.மு.க., - மா.கம்யூ., - வி.சி., ஒரு சில இடங்களில் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. மாவட்டத்தில், 19 மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திலும் தி.மு.க., வெற்றி பெற்று தக்க வைத்து கொண்டது.அதேபோல், 9 ஒன்றியங்களிலும் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க., 18, அ.தி.மு.க., 2, வி.சி., 1, சுயேச்சை 2 வெற்றி. சங்கராபுரம் ஒன்றியத்தில் 24 இடங்களில் தி.மு.க., 20, அ.தி.மு.க., - மா.கம்யூ.,- வி.சி., மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி.சின்னசேலம் ஒன்றியத்தில் 21 இடங்களில் தி.மு.க., 17, அ.தி.மு.க., 3, காங்., 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. தியாகதுருகம் ஒன்றியத்தில் 16 இடங்களில் தி.மு.க., 14, அ.தி.மு.க., 2 இடங்களில் வெற்றி.கல்வராயன்மலை ஒன்றியத்தில் 7 ஒன்றிய கவுன்சிலர் பதவியையும் தி.மு.க., தக்க வைத்துக் கொண்டது. ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 25 இடங்களில் தி.மு.க., 21, அ.தி.மு.க., 3, சுயேச்சை 1 வெற்றி.திருக்கோவிலுார் ஒன்றியத்தில் 23 இடங்களில் தி.மு.க., 20, அ.தி.மு.க., 2, சுயேச்சை 1 வெற்றி. திருநாவலுார் ஒன்றியத்தில் 20 இடங்களில் தி.மு.க., 13, அ.தி.மு.க., 2, மா.கம்யூ., 1, ம.தி.மு.க., 1, வி.சி., 1, சுயேச்சை 2 வெற்றி.உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க., 15, அ.தி.மு.க., 1, பா.ம.க., 1, வி.சி., 1, சுயேச்சை 3 வெற்றி. மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் தி.மு.க., 145 இடங்களிலும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான வி.சி., 4, மா.கம்யூ., 2, காங்., 1, ம.தி.மு.க., 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல், அ.தி.மு.க., 16 இடங்களிலும், பா.ம.க., ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சையாக 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதனால், 9 ஒன்றிய சேர்மன் பதவிகள் மற்றும் மாவட்ட சேர்மன் பதவி தி.மு.க.,வசம் சென்றுள்ளது. அடுத்த கட்டமாக ஒன்றிய சேர்மன் பதவியை பிடிப்பதில் தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்கள் பலர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X