பொது செய்தி

தமிழ்நாடு

மகா சண்டி ஹாேமம் நிறைவு திரளான பக்தர்கள் பங்கேற்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
உடுமலை : எலையமுத்துார் மாரியம்மன் கோவிலில், மகா சண்டி ேஹாமப் பெருவிழா நிறைவு நாளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை அருகே எலையமுத்துார், மாரியம்மன் கோவிலில், மகா சண்டி ேஹாமப்பெருவிழா, கடந்த 11ம் தேதி துவங்கியது. முதல் நாளில், கோ பூஜை, மகா கணபதி பூஜை, மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இரண்டாம் கால யாக பூஜைகளுக்குப்பிறகு, நேற்று, கோவிலில், காலை, 6:30
 மகா சண்டி  ஹாேமம் நிறைவு  திரளான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை : எலையமுத்துார் மாரியம்மன் கோவிலில், மகா சண்டி ேஹாமப் பெருவிழா நிறைவு நாளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை அருகே எலையமுத்துார், மாரியம்மன் கோவிலில், மகா சண்டி ேஹாமப்பெருவிழா, கடந்த 11ம் தேதி துவங்கியது. முதல் நாளில், கோ பூஜை, மகா கணபதி பூஜை, மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இரண்டாம் கால யாக பூஜைகளுக்குப்பிறகு, நேற்று, கோவிலில், காலை, 6:30 மணிக்கு மேல், சகஸ்ரநாம பாராயணம், சண்டி ேஹாமம், மூன்றாம் கால, 108 திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.மாலை, 4:00 மணிக்கு, கலச பூஜை, தேவி மகாத்மியம், 64 யோசினி, கோ பூஜை, சுவாசினி பூஜை, நவாரண பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம் நடந்தது.இரவு கும்பங்கள் மங்கள வாத்தியங்களுடன் எடுத்து செல்லப்பட்டு, அம்பாளுக்கு, மகா தீர்த்தாபிேஷகம், மகா தீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த மாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர். நாள்முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X