நாம் தமிழர் கட்சி சீமான் மீது புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி சீமான் மீது புகார்

Added : அக் 14, 2021
Share
திருப்பூர் : காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் சீமான் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இளைஞர் காங்., நிர்வாகிகள் திருப்பூர் கமிஷனர் ஆபீசில் புகார் அளித்தனர்.திருப்பூர் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:நாம்

திருப்பூர் : காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் சீமான் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இளைஞர் காங்., நிர்வாகிகள் திருப்பூர் கமிஷனர் ஆபீசில் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கன்யாகுமரியில் நடந்த கட்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அதில், காங்., கட்சியை சேர்ந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், மிரட்டும் வகையிலும் பேசினர்.தொடர்ந்து மக்களிடம் அவதுாறுகளை பரப்பி, பிரிவினைவாதத்தையும், தீவிரவாதத்தையும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களது சமூக வலைள கணக்குகளை முடக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X