பொது செய்தி

தமிழ்நாடு

வடக்குத்து ஊராட்சியின் சாதனை தொடர்கிறது

Added : அக் 14, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து ஊராட்சியில் மக்கள் நலப்பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், ஊராட்சி செயலர் எழில் அரசன், வார்டு உறுப்பினர்கள் பினா, ரேவதி, ஈஸ்வரி, சுசீலா, விஜயநாதன், தமிழ்ச்செல்வன், மணிகண்டன், ராஜபூபதி, நளினி, மீனா, சாந்தி ஆகியோர் வடக்குத்து ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு தேவையான நலத்

குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து ஊராட்சியில் மக்கள் நலப்பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், ஊராட்சி செயலர் எழில் அரசன், வார்டு உறுப்பினர்கள் பினா, ரேவதி, ஈஸ்வரி, சுசீலா, விஜயநாதன், தமிழ்ச்செல்வன், மணிகண்டன், ராஜபூபதி, நளினி, மீனா, சாந்தி ஆகியோர் வடக்குத்து ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு தேவையான நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன் கூறியதாவது:அசோக் நகர் விரிவாக்கம், சக்தி நகர் விரிவாக்கம், அண்ணா கிராமம் விரிவாக்கம், தில்லை நகர் ஆகிய நகர் பகுதிகள் மற்றும் வடக்குத்து கிழக்கு, மேல் வடக்குத்து காலனி ஆகிய பகுதிகளில் தரமான இணைப்பு சாலைகளை அமைக்கப்பட்டுள்ளது. கீழ் வடக்குத்து பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், காந்தி கிராமத்தில் புதிய ரேஷன் கடை, மன்னன் நகர் மற்றும் மேல் வடக்குத்து காலனி பகுதிகளில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி பகுதிகளில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.அண்ணா கிராமம், அண்ணா கிராமம் விரிவாக்கம், கே.எஸ்.கே.,நகர், அசோக் நகர் 1 மற்றும் 2 ,ரெயின்போ நகர், ஸ்ரீராம் நகர்,ராம்கோவி நகர், வடக்குத்து கிழக்கு, மேல்வடக்குத்து காலனி பகுதிகளில் புதிய மின் மோட்டார் மாற்றப்பட்டுள்ளது. கண்ணுத்தோப்பு, வடக்குத்து கிழக்கு, மில்லினியம் கார்டன், தில்லை நகர், ஜோதி வள்ளலார் நகர், பொன்னங்குப்பம், ஜெயப்பிரியா நகர், துரைசாமி நகர் பகுதிகளில் புதிதாக ஆழ்துளை போர் வசதி செய்யப்பட்டுள்ளது.மணிநகர், ஸ்ரீராம் நகர், காந்தி நகர், பவுனாம்பாள் நகர் பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்வடக்குத்தில் புதிய பள்ளிக் கூடம், வடக்குத்து கிழக்கு, சந்தைவெளிப்பேட்டை, பொன்னங்குப்பம் ஆகிய பள்ளிகளில் புதிதாக சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளது.கீழ் வடக்குத்து கிராமத்தில் மயானத்திற்கு இடவசதி இல்லை, மேல்வடக்குத்து கிராமத்தில் பள்ளமான மயான பகுதியில் மண் நிரப்பி தகன மேடை அமைக்க வேண்டும். மேல்வடக்குத்து காலனி மயானத்திற்கு பாதை அமைக்க வேண்டும். பொன்னங்குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த வேண்டும்.என, எங்களது பல்வேறு கோரிக்கைகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நிறைவேற்றித் தருவார். வடக்குத்து ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் விரைந்து செயல்படுத்தி தமிழக அளவில் வடக்குத்தை முதன்மை ஊராட்சியாக மாற்றுவதற்காக ஒன்றுபட்டு பாடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X