பொது செய்தி

தமிழ்நாடு

'பிளண்டட் சிமெண்ட்' தயாரிப்பில் முன்னணி நிறுவனம் - ராம்கோ சிமெண்ட்

Added : அக் 14, 2021
Share
Advertisement
உலக அளவில் புகழ் பெற்று இன்று அதிவேகமாக முன்னேறி வரும் பல தொழில் நிறுவனங்களை தன்னகத்தே கொண்டது ராம்கோ குரூப். ஆண்டு ஒன்றுக்கு 6000 கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் செய்யும் குரூப்பின் ஸ்தாபகர் அமரர் ராஜபாளையம் பி.ஏ.சி., ராமசாமி ராஜா ஆவார். நிறுவனத்தில் சிமெண்ட், சிமெண்ட் தகடுகள், கணினி மென்பொருள் நிறுவனங்களும் அடங்கும்.தொழிற்சாலைகள்விருதுநகர் மாவட்டம், ராமசாமி ராஜா நகர்,

உலக அளவில் புகழ் பெற்று இன்று அதிவேகமாக முன்னேறி வரும் பல தொழில் நிறுவனங்களை தன்னகத்தே கொண்டது ராம்கோ குரூப். ஆண்டு ஒன்றுக்கு 6000 கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் செய்யும் குரூப்பின் ஸ்தாபகர் அமரர் ராஜபாளையம் பி.ஏ.சி., ராமசாமி ராஜா ஆவார். நிறுவனத்தில் சிமெண்ட், சிமெண்ட் தகடுகள், கணினி மென்பொருள் நிறுவனங்களும் அடங்கும்.தொழிற்சாலைகள்விருதுநகர் மாவட்டம், ராமசாமி ராஜா நகர், ஆந்திராவில் ஜெயந்திபுரம், அரியலுார், ஆலத்தியூர் (ஆசியாவிலேயே அதிநவீன சிமெண்டு ஆலை). அதில், 30.5 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகா, மாத்தோடு சிமெண்ட் ஆலை, ஆலத்தியூரில் அணல் மின்நிலையம், சேலம் மாவட்டம், வாழப்பாடி; காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், மேற்கு வங்கம், ஒரிசாவில் கிரைண்டிங் ஆலை, நாகர்கோவில் அருகே சிமெண்ட் பேக்கிங் செய்யும் ஆலை உள்ளன.சமுதாய பணியில் ராம்கோ:அருகில் உள்ள கிராமங்களும் வளர இது வரை சுமார் ரூ. 15 கோடிக்கு மேல் கிராம வளர்ச்சிகளுக்கு உதவி செய்துள்ளது. இலவச பொது மருத்துவ முகாம்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆலத்தியூர் சுரங்க பகுதியில் இது வரை பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, இன்றும் பசுமையாக உள்ளது. மழை நீர் சேகரிப்பு, சுரங்க நீர் மறுசுழற்சி முறைகள் ஆலையில் சிறப்பான முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.விருதுகள்:ராம்கோ சிமெண்ட் நிறுவனங்களின் சிறப்பான சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள், பத்திரிகைகள் பரிசுகள் வழங்கியுள்ளன.சிமெண்டின் சிறப்பு:ராம்கோ சூப்பர் கிரேடு சிமெண்ட் ஜெல் கவசம் போல் பரவி உப்புநீர் மற்றும் உப்பு காற்றால் ஏற்படும் அரிப்பை தடுத்து, அடர்த்தியான கான்கிரீட் மற்றும் உயர்தர பினிஷிங் கிடைக்கிறது. உப்புக்காற்றால் ஏற்படும் தீங்குகளில் இருந்து சூப்பர் கிரேடு சிமெண்ட் கட்டடங்களை பாதுகாக்கிறது.கோவிட் - 19 பங்களிப்புகோவிட் காலங்களில் ராம்கோ சிமெண்ட் ஆலையின் நிர்வாக மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில அரசுகளுடன் இணைந்து களப்பணிகளில் ராம்கோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கொரோனா காலங்களில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ராம்கோ நிறுவனம் ரூ. 2.50 கோடி வழங்கியுள்ளது.ராம்கோவின் சிறப்பு:மனித வளத்தின் மீது கம்பெனி கொண்டுள்ள நம்பிக்கை, புதிய தொழிற்நுட்பம், புதிய மாற்றம், வாடிக்கையாளர் எதிர் கொள்ளும் பாங்கு; அவர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் வாழ்க்கையில் முன்னேற வைத்தல்.தொடர்ச்சியான தர மேம்பாட்டுடன் கூடிய உற்பத்தி முன்னேற்றம் ஆகியவற்றால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியமாகிறது. எல்லாவற்றையும் விட வாடிக்கையாளர்களின் மத்தியில் ராம்கோ சிமெண்டிற்கு உள்ள நற்பெயரே இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஆதரவுடன் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் சீர்மிகு தலைமையில் ராம்கோ குரூப் நிறுவனங்கள் சிறப்பாக இயங்கி, தமிழகத்திற்கே பெருமை சேர்க்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X