பொது செய்தி

தமிழ்நாடு

26.30 கிலோ குட்கா பறிமுதல் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடத்திய ஆய்வில், தடை செய்யப்பட்ட, 26.30 கிலோ புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு விதிமுறைகள், சரிவர பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி,
 26.30 கிலோ குட்கா பறிமுதல்   உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி


திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடத்திய ஆய்வில், தடை செய்யப்பட்ட, 26.30 கிலோ புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு விதிமுறைகள், சரிவர பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, விஜயராஜா, சிரஞ்சீவி, கேசவராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழு, கடந்த சில நாட்களாக தொடர் ஆய்வு மேற்கொண்டது.மாநகராட்சி பகுதியில், கலப்பட டீத்துாள் பயன்படுத்திய டீக்கடைகளுக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசு தடை செய்துள்ள புகையிலை பொருட்கள் விற்ற எட்டு கடைகளில், 26.30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்து, ஐந்து கடைகளுக்கு, 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இறைச்சிக்கடை, ஓட்டல், பாஸ்ட்புட் கடைகளில் ஆய்வு நடத்தி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.பண்டிகை நேரம் என்பதால், ஸ்வீட் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், கடைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இனிப்பு, காரம் வகைகள், எவ்வளவு நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதை குறிக்கும் வகையில், 'லேபிள்' பார்வைக்கு வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X