வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிருஷ்ணசாமி கல்லுாரிகள் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிருஷ்ணசாமி கல்லுாரிகள் சாதனை

Added : அக் 14, 2021
Share
கல்விப் பணியில் கிருஷ்ணசாமி கல்விக் குழுமம் கல்வி, ஒழுக்கம், உயர்வு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு கடலுார் மாவட்டத்தின் கல்விக் கோவிலாக விளங்குகிறது.கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை.இதன் தலைவர் டாக்டர் ராஜேந்திரன்,கிருஷ்ணசாமிபொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரி, கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல்,கலை மற்றும் மேலாண்மை கல்லுாரி, கிருஷ்ணசாமி நினைவு

கல்விப் பணியில் கிருஷ்ணசாமி கல்விக் குழுமம் கல்வி, ஒழுக்கம், உயர்வு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு கடலுார் மாவட்டத்தின் கல்விக் கோவிலாக விளங்குகிறது.கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை.இதன் தலைவர் டாக்டர் ராஜேந்திரன்,கிருஷ்ணசாமிபொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரி, கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல்,கலை மற்றும் மேலாண்மை கல்லுாரி, கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லுாரி ஆகியவை நடத்தி வருகிறார்.கடலுார்--நெல்லிக்குப்பம் சாலை குமாரபுரத்தில் இயற்கைச் சூழலில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கும் இக்கல்லுாரிகளின்செயலாளராக விஜயகுமார், அலுவலராக கண்ணன் உள்ளனர்.கடந்த 2001ல் துவங்கிய கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் முதல்வராக இளங்கோ, துணை முதல்வராக ரகு, நிர்வாக அலுவலராக பாலகிருஷ்ணன் உள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ்இரண்டாண்டு எம்.சி.ஏ., பட்டப்படிப்பு உள்ள ஒரே பொறியியல் கல்லுாரி இதுவே ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லுாரியின் 5 முதல் 10 மாணவர்கள்அண்ணா பல்கலைக் கழக தர வரிசை பட்டியலில் இடம் பிடித்து பெருமை சேர்க்கின்றனர். கடந்த 2007ல் துவங்கிய கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல், கலை மற்றும் மேலாண்மை கல்லுாரி முதல்வராக நிர்மலா, நிர்வாகஅலுவலராக சங்கர நாராயணன் உள்ளனர். தேசிய மதிப்பீடு தரச்சான்று அங்கீகாரம் பெற்ற இக்கல்லுாரியில் ஒவ்வொரு ஆண்டும் பல மாணவிகள் பல்கலைக்கழக அளவில் மதிப்பீடு பெற்றுகல்லுாரிக்கு பெருமை சேர்த்த வண்ணம் உள்ளனர்.கடந்த 1997ல் துவங்கிய கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லுாரியின் முதல்வராக ரமேஷ்பாபு, துணை முதல்வராக வாசுதேவன், நிர்வாக அலுவலராக சந்திரமவுலி உள்ளனர்.மாணவ மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில்பஸ் வசதி புதுச்சேரி, விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில்இயக்கப்படுகிறது.இரு பாலருக்கும் தனித்தனி கட்டணமில்லா விடுதி உள்ளது.குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான சைவ உணவு வழங்கப்படுகிறது.இக்கல்லுாரிகளில் பயின்ற மாணவ, மாணவியர் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் தலைமைப் பதவியில் பணியாற்றி கல்லுாரிக்கு பெருமை சேர்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X