ஏற்றுமதியாளர் சங்க மகாசபை கூடுகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதியாளர் சங்க மகாசபை கூடுகிறது

Added : அக் 14, 2021
Share
திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை ஏற்றுமதி துறையினர் உறுப்பினராக உள்ளனர்.இச் சங்கத்தின் 31வது மகாசபை கூட்டம், வரும் நவம்பர் 15 ம் தேதி, முதலிபாளையம் டெக்கிக் வளாகத்தில் உள்ள, நிப்ட்-டீ கல்லுாரி அரங்கில், மாலை, 5:00 மணிக்கு நடைபெற உள்ளது.ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 8 ம் தேதி நடந்த செயற்குழு

திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை ஏற்றுமதி துறையினர் உறுப்பினராக உள்ளனர்.

இச் சங்கத்தின் 31வது மகாசபை கூட்டம், வரும் நவம்பர் 15 ம் தேதி, முதலிபாளையம் டெக்கிக் வளாகத்தில் உள்ள, நிப்ட்-டீ கல்லுாரி அரங்கில், மாலை, 5:00 மணிக்கு நடைபெற உள்ளது.ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 8 ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில், சங்க 'பைலா' வில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

சங்க பைலா 20 'சி' ன்படி, தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், இரண்டு முறைக்கு மேல் (ஒருமுறை என்பது மூன்று ஆண்டு) பதவி வகிக்க முடியாது.இந்த விதிமுறையை, மூன்று முறைக்கு மேல் பதவிவகிக்க முடியாது என திருத்தம் செய்ய செயற்குழு பரிந்துரைத்துள்ளது. செயற்குழுவின் 'பைலா' திருத்தம் பரிந்துரை, மகாசபை ஒப்புதலுக்கு முன்வைக்கப்பட உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X