கல்வி உதவித்தொகை கிடைக்காதோர் யார் வரும் 20ம் தேதிக்குள் தகவல் திரட்ட உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை கிடைக்காதோர் யார் வரும் 20ம் தேதிக்குள் தகவல் திரட்ட உத்தரவு

Added : அக் 14, 2021
Share
கோவை : தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில், வெற்றி பெற்று கல்வி உதவித்தொகை கிடைக்க பெறாத மாணவர்களின் விபரங்களை, தேசிய உதவித்தொகை இணையதளத்தில், வரும் 20ம் தேதிக்குள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய, அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும்


கோவை : தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில், வெற்றி பெற்று கல்வி உதவித்தொகை கிடைக்க பெறாத மாணவர்களின் விபரங்களை, தேசிய உதவித்தொகை இணையதளத்தில், வரும் 20ம் தேதிக்குள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய, அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இத்தேர்வில் வெற்றி பெற்றால், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 வரை, கல்வி உதவித்தொகையாக அளிக்கப்படுகிறது.

இதில், சிலருக்கு உதவித்தொகை கிடைக்காமல் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களின் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை, தேசிய உதவித்தொகை இணையதளத்தில் 'அப்டேட்' செய்வது அவசியம்.இது தவறும் பட்சத்திலும் உதவித்தொகை கிடைப்பதில்லை. இம்மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் வங்கி கணக்கு தகவல்களை, வரும் 20 ம் தேதிக்குள் பதிவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவர்களின் விபரங்கள் அனுப்புமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதோடு, 2014 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று, கல்வி உதவித்தொகை கிடைக்க பெறாத மாணவர்களின் விபரங்களையும் சேகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால், இதுவரை உதவித்தொகை கிடைக்க பெறாத மாணவர்கள் பலனடைவர் என, தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X