பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என்.எல்.சி., இந்தியா நிறுவனம்

Added : அக் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நவரத்னா தகுதிபெற்ற என்.எல்.சி., இந்தியா நிறுவனம் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்குகிறது.63 ஆண்டுகளைக் கடந்து, வைரவிழா கண்ட இந்நிறுவனம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா,

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நவரத்னா தகுதிபெற்ற என்.எல்.சி., இந்தியா நிறுவனம் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்குகிறது.63 ஆண்டுகளைக் கடந்து, வைரவிழா கண்ட இந்நிறுவனம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.இந்நிறுவனம், 1956ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி ஒரு வர்த்தக நிறுவனமாகப் பதியப்பட்டு, 20.05.1957 அன்று நேரு துவக்கி வைத்தார். தற்போது, நெய்வேலியில் சுரங்கம்--1, சுரங்கம்--II மற்றும் சுரங்கம்--IA என ஆண்டிற்கு, 2 கோடியே 85 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி மற்றும் ராஜஸ்தான் மாநிலம், பர்சிங்சரில் ஆண்டிற்கு 21 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுக்கும் 4 சுரங்கங்களை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.அனல் மின் நிலையங்களைப் பொறுத்தவரை, நெய்வேலியில் உள்ள இரண்டாம் அனல்மின் நிலையம், முதல் மற்றும் இரண்டாம் அனல்மின் நிலையங்களின் விரிவாக்கங்கள் மற்றும் நெய்வேலி புதிய அனல்மின் நிலையம் உட்பட 4 மின் நிலையங்கள், மணிக்கு 33 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் (3390 மெகாவாட்) மின் சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் 250 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் செயல்படுத்தப்படுகிறது.இந் நிறுவனம், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எனப்படும் முந்தைய தமிழக மின் வாரியத்துடன் இணைந்து 89:11 என்ற மூலதன விகிதத்தில் 'என்.எல்.சி., தமிழ்நாடு மின் நிறுவனம்' (NTPL) என்ற கூட்டுநிறுவனத்தை அமைத்து, அதன் மூலம் துாத்துக்குடியில், நிலக்கரியில் இயங்கும் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை செயல்படுத்தி வருகிறது.இதன்மூலம் நிலக்கரியில் இயங்கும் அனல்மின் துறையில், இந்நிறுவனம் கால்பதிந்தது.இத்துடன், உத்தரப்பிரநேச மாநிலம், கதாம்பூர் பகுதியில் நிலக்கரியில் செயல்படும் 1980 மெகாவாட் மின் நிலையத்தை, "உத்தரப்பிரதேஷ் ராஜ்ய வித்யூத் உத்பாதன் நிகாம்' நிறுவனத்துடன் இணைந்து, 51:49 என்ற மூலதன விகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'நெய்வேலி உத்தரப்பிரதேஷ் மின்நிறுவனம்' (NUPPL) என்ற கூட்டுமுயற்சி நிறுவனத்தின் மூலம் இந்நிறுவனம் அமைத்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக, ஒடிசா மாநிலம், தலாபிரா பகுதியில், இந்நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் 2400 மெ.வா திறன் கொண்ட அனல் மின் நிலையத்தையும், இந்நிறுவனம் அமைக்கவுள்ளது.தலாபிரா பகுதியிலுள்ள ஆண்டிற்கு 200 லட்சம் டன் நிலக்கரி வெட்டியெடுக்கும் சுரங்கம்--மிமி., மற்றும் மிமிமில், 26.04.2020 அன்று நிலக்கரி உற்பத்தி தொடங்கியதன் மூலம், இந்நிறுவனம் நிலக்கரி சுரங்கத்துறை என்ற புதிய வர்த்தகத்திலும், தன்னை தற்போது ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.அது போல, ஜார்க்கண்ட் மாநிலம், நெற்கு பச்வாரா பகுதியில் இந்நிறுவனம், அமைத்து வரும் ஆண்டிற்கு 90 லட்சம் டன் திறனுள்ள நிலக்கரி சுரங்கத்திலும் 2022--23ம் நிதியாண்டிற்குள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் விரைவாக நடக்கின்றன.பசுமை ஆற்றல் எனப்படும், புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையின்கீழ், நெய்வேலி மற்றும் விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் தெற்கு அந்தமான் தீவுகளில் மொத்தம் 1370.06 மெகாவாட் சூரியஒளி மின் நிலையங்களையும், திருநெல்வேலி மாவட்டம் கழுநீர்குளத்தில் 51 மெ.வா. காற்றாலை மின் நிலையத்தையும் இந்நிறுவனம் வெற்றிகரமாக இயக்கி வருகிறது.மேலும், இந்திய நிலையங்களையும், நிலக்கரி நிறுவனத்துடன் 2000 மெ.வா. அனல்மின் இணைந்து, 3000 மெ.வா.சூரியஒளி மின் நிலையங்களையும் அமைக்க 50:50 என்ற மூலதன விகிதத்தில் 'கோல் லிக்னைட் ஊர்ஜா விகாஸ் பி. லிட்.' (CLUVPL) என்ற கூட்டு நிறுவனத்தை 10.11.2020 அன்று இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.2030ம் ஆண்டில், ஆண்டிற்கு 9 கோடியே 36 லட்சம் டன் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுத்து, மணிக்கு 1 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் (13,650 மெ.வா.) மின்சக்தியை தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்து, நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய தகுதியான மகா ரத்னா என்ற நிலையை அடைய பல்வேறு புதிய திட்டங்களையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
16-அக்-202115:06:33 IST Report Abuse
JeevaKiran கேட்க சந்தோசமாக இருக்கிறது. இதேபோல் அணைத்து அரசு துறையும் வெற்றிகரமாக இயங்க வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X