பொது செய்தி

தமிழ்நாடு

நுால் ஏஜன்ட் கடத்தல் மேலும், மூவர் கைது

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், நுால் விற்பனை முகவர் கடத்தல் விவகாரத்தில், மேலும், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 64; நுால் விற்பனை முகவர். கடந்த, 9ம் தேதி காரில் சென்ற, ஆறு பேர் கொண்ட கும்பல், செல்வராஜை கடத்தி சென்றது. அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.விசாரணையில், 25

திருப்பூர் : திருப்பூரில், நுால் விற்பனை முகவர் கடத்தல் விவகாரத்தில், மேலும், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 64; நுால் விற்பனை முகவர். கடந்த, 9ம் தேதி காரில் சென்ற, ஆறு பேர் கொண்ட கும்பல், செல்வராஜை கடத்தி சென்றது.

அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.விசாரணையில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நுால்களை வாங்கி சென்று, கடந்த, 2.5 ஆண்டுகளாக பணம் கொடுக்காமல் செல்வராஜ் காலம் கடத்தி வந்தார். அவரை கடத்தி சென்று பணத்தை பெற திட்டமிட்டது தெரிந்தது.

இதுதொடர்பாக, திருப்பூர் காமராஜர் வீதியை சேர்ந்த குமார், 42, உடுமலை, தளியை சேர்ந்த செந்தில்பிரபு, 44, திருப்பூர் ராம்நகரை சேர்ந்த ராஜேந்திரன், 47 ஆகியோரை கைது செய்து, செல்வராஜை மீட்டனர்.இச்சூழலில், தலைமறைவான சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த சவுந்திரபாண்டி, 20, அதே பகுதியை சேர்ந்த நவீன், 20 மற்றும் ராம்நகரை சேர்ந்த சர்புதின், 32 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X