தமிழ்நாடு

குறி;விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் பதவிக்கு தி.மு.க.,நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி

Added : அக் 14, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதால், சேர்மன் பதவியை கைப்பற்ற அக்கட்சியினர் வியூகம் அமைத்து வருகின்றனர்.விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, அ.தி.மு.க., தரப்பில் 5 கவுன்சிலர்களும், தி.மு.க., 4, பா.ம.க., 4, சுயேச்சைகள் 4 மற்றும் பா.ஜ., -

விருத்தாசலம்-விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதால், சேர்மன் பதவியை கைப்பற்ற அக்கட்சியினர் வியூகம் அமைத்து வருகின்றனர்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, அ.தி.மு.க., தரப்பில் 5 கவுன்சிலர்களும், தி.மு.க., 4, பா.ம.க., 4, சுயேச்சைகள் 4 மற்றும் பா.ஜ., - தே.மு.தி.க., தலா 1 கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றியது.

இதில், 4 சுயேச்சை கவுன்சிலர்களில் தி.மு.க., - அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காத நபர்களும் அடங்குவர்.கவுன்சிலர்கள் மெஜாரிட்டியை முன்னிருத்தி, அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க., சேர்மன் பதவியையும், கூட்டணியில் இருந்த பா.ம.க.,வுக்கு துணை சேர்மன் பதவியும் ஒதுக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், கவுன்சிலர்கள் மெஜாரிட்டி இல்லாமல், தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் திணறியது.அதற்கேற்ப, சுயேச்சை கவுன்சிலர்களில் இருவர், பா.ஜ.,வில் திடீரென ஐக்கியமாகினர். இது விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் நடந்த தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று, ஆளுங்கட்சியாக மாறினாலும், ஒன்றிய கவுன்சிலர்கள் மெஜாரிட்டி இல்லாத நிலை தொடர்ந்தது.இந்நிலையில், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் மல்லிகா பாலதண்டாயுதம் கொரோனா பாதித்து இறந்ததால், அந்த வார்டுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. அதில், தி.மு.க., சாந்தி மதியழகன் வெற்றி பெற்றதால், தி.மு.க., கவுன்சிலர்கள் எண்ணிக்கை 5 ஆகவும், அ.தி.மு.க., எண்ணிக்கை 4 ஆகவும் சரிந்தது.கவுன்சிலர்கள் மெஜாரிட்டி கூடியதால், சுயேட்சைகள் மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்த ஒரு சில கவுன்சிலர்களை வளைத்து போட்டு, சேர்மன் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என தி.மு.க., நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, கடந்த காலங்களில் போதிய நிதி ஒதுக்காதது, ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ள கவுன்சிலர்களிடம் மறைமுக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆளுங்கட்சியாக தி.மு.க., இருப்பதால் நிதி ஒதுக்கீடு, தேவையான வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை தரப்படும் என அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஊரக உள்ளாட்சித்துறை சட்ட விதிமுறைகளின்படி, கவுன்சிலர்களின் மெஜாரிட்டியுடன் அ.தி.மு.க., சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, தி.மு.க., கவுன்சிலரை சேர்மனாக அமர வைப்பது என அக்கட்சியினர் வியூகம் அமைத்து வருகின்றனர்.இதற்கிடையே இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்து, கவுன்சிலர் மெஜாரிட்டி குறைந்ததால், விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் பதவியை எக்காரணம் கொண்டும் இழந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், அக்கட்சியினரும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X