பொது செய்தி

தமிழ்நாடு

கந்தன் பிள்ளையார் ரோட்டில் நில அளவீடு திட்டச்சாலை உருவாக்கினால் வெள்ளலூர் செல்லலாம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : நஞ்சுண்டாபுரத்தில் இருந்து வெள்ளலுாருக்கு இணைப்பு சாலை ஏற்படுத்தும் வகையில், கந்தன் பிள்ளையார் ரோட்டை மேம்படுத்தினால், புதிய திட்டச்சாலை உருவாகும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக. ரோட்டின் இருபுறமும் நேற்று நில அளவீடு செய்யப்பட்டது.கோவை, ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளலுார் செல்வோர், நஞ்சுண்டாபுரத்தில் பயணித்து, ரயில்வே பாலத்துக்கு கீழே


கோவை : நஞ்சுண்டாபுரத்தில் இருந்து வெள்ளலுாருக்கு இணைப்பு சாலை ஏற்படுத்தும் வகையில், கந்தன் பிள்ளையார் ரோட்டை மேம்படுத்தினால், புதிய திட்டச்சாலை உருவாகும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக. ரோட்டின் இருபுறமும் நேற்று நில அளவீடு செய்யப்பட்டது.

கோவை, ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளலுார் செல்வோர், நஞ்சுண்டாபுரத்தில் பயணித்து, ரயில்வே பாலத்துக்கு கீழே சென்று, கரடுமுரடான பாதையை பயன்படுத்துகின்றனர். இவ்வழியாக செல்ல விரும்பாதவர்கள், போத்தனுார் வழியாக வெள்ளலுார் செல்கின்றனர்.

இதற்கு மாற்றாக, நஞ்சுண்டாபுரத்தில் ஈஷா மயானத்துக்கு அருகே வழித்தடம் உள்ளது. 60 அடி திட்டச்சாலை உருவாக்குவதற்கான திட்ட வரைவு, நகர ஊரமைப்பு துறையிடம் இருக்கிறது.ரயில்வே கேட்டை கடந்ததும், கந்தன் பிள்ளையார் ரோட்டின் இருபுறமும் நிலத்தை கையகப்படுத்தி, ஆற்றின் குறுக்கே பாலம் கட்டினால், 1.5 கி.மீ., துாரத்தில் வெள்ளலுாருக்கு இணைப்பு சாலை கிடைக்கும்.இச்சூழலில் உப்பிலிபாளையம் கிராம விவசாயிகள் சங்கத்தினர், நில அளவீடு செய்து, எல்லை கற்கள் நட கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கந்தன் பிள்ளையார் ரோட்டின் இருபுறமும் நில அளவுத்துறையினர் நேற்று ஆய்வு செய்து, எல்லைக்கற்கள் நட்டனர்.சில இடங்களில் ரோடு ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பது தெரியவந்தது. 40 அடி அகலத்துக்கு இருக்க வேண்டிய ரோடு, 20 அடியாக சுருங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் பாக்கு, தென்னை மரங்கள், வேலி, கான்கிரீட் வீடுகள் போன்றவற்றை, நில உரிமையாளர்கள் தாமாக முன்வந்து, 25ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இயலாதபட்சத்தில், சங்கம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதற்கான செலவை நில உரிமையாளர்களிடம் வசூலிப்பது என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X