பொது செய்தி

தமிழ்நாடு

55 ஆண்டுகள் மக்கள் சேவையில் கடலுார் அழகப்பா நகை மாளிகை

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோட்டில் கடந்த 1966ம் ஆண்டு முதல் லாபம் மட்டுமே குறிக்கோள் இன்றி வாடிக்கையாளர்களின் திருப்திக்காக வியாபாரம் செய்து வரும் நிறுவனம் அழகப்பா நகை மாளிகை.கடை உரிமையாளர் அழகப்பா மணி கூறியதாவது:கடந்த 55 ஆண்டுகளாக மக்கள் சேவையில், மிகக் குறைந்த சேதாரத்தில், அனைத்து நகைகளும் புத்தம் புதிய டிசைன்களில் செய்து தருகிறோம். தீபாவளி

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோட்டில் கடந்த 1966ம் ஆண்டு முதல் லாபம் மட்டுமே குறிக்கோள் இன்றி வாடிக்கையாளர்களின் திருப்திக்காக வியாபாரம் செய்து வரும் நிறுவனம் அழகப்பா நகை மாளிகை.கடை உரிமையாளர் அழகப்பா மணி கூறியதாவது:கடந்த 55 ஆண்டுகளாக மக்கள் சேவையில், மிகக் குறைந்த சேதாரத்தில், அனைத்து நகைகளும் புத்தம் புதிய டிசைன்களில் செய்து தருகிறோம். தீபாவளி முன்னிட்டு புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து நகைகளும் 916 பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரை உள்ளது. வெள்ளி பொருட்கள் குறைந்த சேதாரம், குறைந்த கூலியில் விற்பனை செய்யப்படுகிறது. சிறுதுளி தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. பழைய நகைகள் வேறு கடை பொருளாக இருந்தாலும் அன்றைய விலைக்கு மாற்றித் தரப்படும். இந்நிறுவனத்தின் நிறுவனர் அழகப்பா நினைவு தினத்தையொட்டி கடந்த 2001ம் ஆண்டு முதல் இலவச கண் கிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கடலுார் சுப்ரீம் அரிமா சங்க ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து அரசுப் பள்ளிகள், மனவளர்ச்சி குன்றிய பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 50 ஜோடி கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.60 முறை ரத்த தானம் வழங்கியதற்காக கலெக்டரிடம் தன்னார்வ ரத்த கொடையாளர் விருது பெற்றுள்ளேன். எனது மனைவி கவிதா மணி, சுப்ரீம் அரிமா சங்கம் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மற்றொரு கிளை சுப்ராய செட்டித் தெருவிலும் உள்ளது. எனது மகன்கள் அஸ்வின், அசோக் ஆகியோரும் நகை விற்பனை செய்கின்றனர். திருவந்திபுரம் மெயின் ரோடு, கே.என்., பேட்டையில் அழகப்பா திருமண மண்டபத்தில் சுப காரியங்கள் நடத்த குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X