பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' அணிந்திருந்தால் மட்டுமே டிக்கெட் கொரோனா தவிர்க்க பயணிகளுக்கு அறிவுரை

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : பஸ் போக்குவரத்து வாயிலாக கொரோனா பரவலை தவிர்க்க, உரிய வழிகாட்டு அம்சங்களை கடைபிடிக்க, பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை இன்றும், நாளை விஜய தசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. பயணிகள் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு மொத்தம், 260 சிறப்பு பஸ்கள்நேற்று


கோவை : பஸ் போக்குவரத்து வாயிலாக கொரோனா பரவலை தவிர்க்க, உரிய வழிகாட்டு அம்சங்களை கடைபிடிக்க, பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை இன்றும், நாளை விஜய தசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

பயணிகள் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு மொத்தம், 260 சிறப்பு பஸ்கள்நேற்று முதல்இயக்கப்படுகின்றன.நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சிங்காநல்லுார், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட்களில் நேற்று காலை முதலே பயணிகள் புறப்பட்ட துவங்கினர். பண்டிகை சமயத்தில், கொரோனா மீண்டும் தலைதுாக்கும் வாய்ப்புள்ளதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது.பஸ் போக்குவரத்து வாயிலாக தொற்று பரவலை தவிர்க்க போக்குவரத்துக்கழகம் சார்பில், பஸ் ஸ்டாண்ட்களில் 'மைக்' வாயிலாக, சமூக இடைவெளி, 'மாஸ்க்', கிருமிநாசினி தெளித்தல் என வழிகாட்டு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க, பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'தொடர் விடுமுறை என்பதால், பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.கொரோனா கட்டுக்குள் இருக்கும் இச்சமயத்தில், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு மைக்கில் அறிவுறுத்தி வருகிறோம். 'மாஸ்க்' அணிந்திருந்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X