பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்கள் பாணியில் விமான கட்டணமும் திடீர் உயர்வு

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : பண்டிகை கால தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், விமான சேவையும், பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேநேரம், விமான டிக்கெட் விலை திடீர் உயர்வால் பயணியர் விரக்தி அடைந்துள்ளனர்.ஆயுத பூஜையை முன்னிட்டு, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில், பஸ்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.
Air plane, flight tickets, Airfare

சென்னை : பண்டிகை கால தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், விமான சேவையும், பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேநேரம், விமான டிக்கெட் விலை திடீர் உயர்வால் பயணியர் விரக்தி அடைந்துள்ளனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில், பஸ்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. ரயில், பஸ்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணியர், விமான பயணங்களை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், தினசரி விமான சேவைகளின் எண்ணிக்கை, 190ல் இருந்து 213ஆக உயர்ந்துள்ளது; பயணியர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களும் திடீரென உயர்ந்துள்ளன. சென்னையில் இருந்து துாத்துக்குடி செல்ல 4,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. நேற்று 7,500 ரூபாயாக உயர்ந்தது.


latest tamil newsநடப்பு ஆண்டு துவக்கத்தில், சென்னை - துாத்துக்குடி விமான கட்டணம் 3,500 ரூபாயாக இருந்தது. விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, மத்திய அரசு இரண்டு முறை கட்டண உயர்வுக்கு அனுமதித்ததால், 4,500 ரூபாயாக மாறியது. இதேபோல, சென்னையில் இருந்து, மதுரை, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு செல்வதற்கான கட்டணமும் அதிகரித்துள்ளது.

'பண்டிகை காலங்களில், தனியார் ஆம்னி பஸ்கள் போல விமான நிறுவனங்களும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டன' என, பயணியர் புலம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-அக்-202117:28:10 IST Report Abuse
மலரின் மகள் சென்னை தூத்துக்குடி விமான டிக்கெட் என்றுமே அதிகமாகத்தான் இருக்கும். ஒருபோதும் குறைவாக இருந்தததில்லை. உதான் திட்டத்தில் இருந்தாலும் விலை குறைவதே இல்லை. எதோ சில விஷயங்கள் இருக்கும். சென்னை மதுரைக்கு சென்று அங்கிருந்து திருநெல்வேலியோ அல்லது தூத்துகுடியோ பேருந்து பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும். டிக்கெட் விலை பாதிக்கு குறைவாக இருக்கும் தூத்துக்குடி விமான டிக்கெட் கம்பேர் செய்யும் பொது. மதுரையிலிருந்து டூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஹை வே சாலை பயணம் நன்றாகவும் வேகமாகவும் குறைவான செலவில் தான் இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்வதற்கு சுங்க கட்டணம் வேறு குறுக்கே வருகிறது, ஆனால் திருநெல்வேலிக்கு சுங்கக்கட்டணம் இருக்காது அவ்வாறு சாலையில் டோல் அமைத்திருக்கிறார்கள். பின்புலம் என்னவோ. விமான நிலையம் தூத்துக்குடியிலிருந்து ஏறத்தாழ இருபது முப்பது கி மீ தூரத்தில் இருக்கிறது. அது அங்கு அதிகம் தான். கார் காரர்கள் இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் கேட்பார்கள். சென்னை மதுரை சென்று தூத்துகுடியோ அல்லது திருநெல்வேலியோ செல்வதே சிறப்பு. தூத்துக்குடி விமான நிலையம் ஒரு வசதியும் பேரத்தாகவே இருக்கிறது. ஒரு உணவகமும் கிடையாது, டி ஸ்டால் உண்டு அனால் விலை மிக மிக மிக மிக மிக அதிகம். வெறும் ஸ்பீஸ்ஜ்ட் இண்டிகோ தான் வந்து உடனடியாக செல்லும். பராமரிப்பு வசதிகள் கிடையாது. விமானத்தில் குறைவான பயணிகள் புக்கிங் செய்திருந்தால், தூத்துக்குடி சென்னை மார்க்க பயணம் ரத்தாகிவிடும். ஆம்னி பேருந்துகளை போலத்தான்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-அக்-202108:39:59 IST Report Abuse
duruvasar பள்ளி, கல்லூரிகள் போல் ஆம்னி பஸ்களில் 95 சதவிகிதம் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் பினாமிகளுக்கும் சொந்தமானது. ஆகையால் வெளியே எடுக்க முடியாதபடி எல்லா ஆணிகளும் ரிவிட் செய்யப்பட்டுள்ளது. எனவே இதை ஆட்டவோ அசைக்கவோ முடியாது.
Rate this:
Cancel
14-அக்-202108:33:10 IST Report Abuse
Mouli. Chennai Chennai to Mumbai itself ticket price is 2000 rs only. Chennai to Thoothukudi 3500 ah. Velangidum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X