11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை தக்க வைக்கும் கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை தக்க வைக்கும் கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி

Added : அக் 14, 2021
Share
கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, கடந்த 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை தக்க வைத்து கல்வியில் புரட்சி செய்து மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது. கடலுார் நகரில் முதன் முறையாக சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஒழுக்கத்துடன் கூடிய கற்றல் முறையில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பள்ளி இயங்குகிறது.கம்மியம்பேட்டை சாலையில் விசாலமான காற்றோட்டமிக்க

கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, கடந்த 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை தக்க வைத்து கல்வியில் புரட்சி செய்து மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது. கடலுார் நகரில் முதன் முறையாக சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஒழுக்கத்துடன் கூடிய கற்றல் முறையில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பள்ளி இயங்குகிறது.கம்மியம்பேட்டை சாலையில் விசாலமான காற்றோட்டமிக்க நிலப்பரப்பில் அமைதியான சுற்றுச்சூழலுடன் கடலுார் பஸ் நிலையம் அருகில் உள்ளது. சுத்திகரித்த குடிநீர், நவீன அறிவியல் ஆய்வகம், நுாலகம், அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான பஸ் வசதி உள்ளது.சிறப்பம்சமாக மத்திய அரசின் 'அடல்' ஆய்வகம் உள்ளது. கராத்தே, யோகா, இசை, ஆர்சரி, ஜூடோ, டென்னிஸ், ஆரோபிக்ஸ், செஸ், பரதநாட்டியம் போன்ற பலதுறை கலைகள் திறமையான விளையாட்டு பயிற்சியாளர்களால் கற்றுத் தரப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் நீதி கதைகள், பாரதியார் பாடல்கள், திருக்குறள் மூலமாக தேசப்பற்று, அறநெறி, ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறது. இந்தி, பிரெஞ்சு போன்ற மொழி பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேரும் நோக்கில் அறிவியல் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திறமையான ஆசிரியர்களை கொண்டு 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வு, வேளாண்மை, சி.ஏ., வணிகவியல் பாடத்திற்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பெருநகரங்களோடு போட்டியிடும் வகையில் திறமையான மாணவர்களை உருவாக்கும் பள்ளியாக உள்ளது. கொரோனா கால சூழலிலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூகுள் வகுப்பறை மூலம் ஆன் லைன் வகுப்புகள் நடக்கிறது. பள்ளியின் வளர்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், தலைவர் சிவகுமார், லட்சுமி சிவகுமார், நிர்வாக அதிகாரி சிவராஜ், முதல்வர் மதுர பிரசாத் பாண்டே கடுமையாக உழைக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X