ஆயுத பூஜைக்கு தயாராகும் தொழில்துறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜைக்கு தயாராகும் தொழில்துறை

Added : அக் 14, 2021
Share
கருமத்தம்பட்டி : ஆயுத பூஜையையொட்டி, தொழிற்சாலைகளில் இயந்திரங்களை துாய்மைபடுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை யொட்டி, தொழிற்சாலைகள் மற்றும் விசைத்தறி கூடங்களில் கடந்த சில நாட்களாக வெள்ளையடித்தல், இயந்திரங்களை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.நேற்று மாலை, சில நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு தொழிலாளர்களுக்கு

கருமத்தம்பட்டி : ஆயுத பூஜையையொட்டி, தொழிற்சாலைகளில் இயந்திரங்களை துாய்மைபடுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை யொட்டி, தொழிற்சாலைகள் மற்றும் விசைத்தறி கூடங்களில் கடந்த சில நாட்களாக வெள்ளையடித்தல்,

இயந்திரங்களை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.நேற்று மாலை, சில நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கருமத்தம்பட்டி, சோமனுார் வட்டாரத்தில், விசைத்தறி கூடங்களில் இன்று ஆயுத பூஜை கொண்டாட தயாராகி வருகின்றனர்.பூக்கள் வருகைவிசைத்தறி கூடங்களில், ஆயுத பூஜை கொண்டாட தேவையான மாலைகள் கட்ட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூ வியாபாரிகள், பூக்களை தருவித்துள்ளனர்.செவ்வந்தி, அரளி, கோழி கொண்டை, சம்மங்கி உள்ளிட்ட பூக்கள் வந்துள்ளன. அதேபோல், பொரி, கடலை, பழவகைகள் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X