பொது செய்தி

தமிழ்நாடு

'டேக் ஆப்' ஆகிறது விமானநிலைய 'கார்கோ!' ஆயிரம் டன் சரக்கு தொடும் தூரம் அதிகமில்லை

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : கோவை சர்வதேச விமானநிலையத்தில் செப்., மாதம், 798 'டன்' கார்கோ கையாளப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்கு முன்பு வரை, கோவை சர்வதேச விமானநிலையத்தில் மாதந்தோறும் ஆயிரம் டன் அளவிலான கார்கோ கையாளப்பட்டு வந்தது. இதில் உள்நாட்டு பிரிவில், 800 டன் மற்றும் வெளிநாட்டு பிரிவில், 200 டன் என்ற கணக்கில் இருந்து வந்தது.இச்சூழலில் கொரோனா தொற்று காரணமாக, விமான இயக்கம் மற்றும் கார்கோ


கோவை : கோவை சர்வதேச விமானநிலையத்தில் செப்., மாதம், 798 'டன்' கார்கோ கையாளப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்கு முன்பு வரை, கோவை சர்வதேச விமானநிலையத்தில் மாதந்தோறும் ஆயிரம் டன் அளவிலான கார்கோ கையாளப்பட்டு வந்தது.

இதில் உள்நாட்டு பிரிவில், 800 டன் மற்றும் வெளிநாட்டு பிரிவில், 200 டன் என்ற கணக்கில் இருந்து வந்தது.இச்சூழலில் கொரோனா தொற்று காரணமாக, விமான இயக்கம் மற்றும் கார்கோ கையாளும் அளவு கணிசமாக பாதிக்கப்பட்டது. தற்போது விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும், கையாளப்படும் கார்கோ அளவும் அதிகரிக்க துவங்கியுள்ளது.விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது:கோவை சர்வதேச விமானநிலையத்தில் செப்., மாதம் மட்டும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில், 690 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில், 108 டன் என, மொத்தம், 798 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளது.கடந்த ஆக., மாதத்துடன் ஒப்பிடும்போது சர்வதேச போக்குவரத்து பிரிவில், 108 டன் கார்கோ மட்டுமே கையாளப்பட்டுள்ளது.

ஆனால், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் ஆக., மாதம், 566 டன் கார்கோ கையாளப்பட்ட நிலையில், செப்., மாதம், 690 டன் கையாளப்பட்டு, 124 டன் கார்கோ அதிகரித்துள்ளது.உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் வழக்கமாக அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமின்றி, தற்போது தொழில்துறை சார்ந்த இயந்திரங்கள், உதிரிபாகங்கள், தங்க கட்டிகள் போன்றவையும் அதிகமாக கையாளப்படுகின்றன.இதுவே உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மாதந்தோறும் அதிக எடையிலான கார்கோ கையாளப்படுவதற்கு காரணமாகும்.சர்வதேச போக்குவரத்து பிரிவில், தற்போது சார்ஜாவுக்கு மட்டுமே கோவையில் இருந்து நேரடியாக விமான சேவை வழங்கப்படுகிறது. இலங்கை மற்றும் மலேசியாவுக்கு விமான சேவை துவங்கவில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X