பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார்-10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே மாணவர்கள் ஆதார் எண், ரேஷன் கார்டு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியுடன் மதிப்பெண்

கடலுார்-10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே மாணவர்கள் ஆதார் எண், ரேஷன் கார்டு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தங்களது பள்ளிக்கு எடுத்துவர வேண்டும்.இம்மாதம் 18ம் தேதி வரை வேலை வாய்ப்புப் பதிவு பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடக்கிறது. பதிவுப்பணி நடக்கும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.மேலும்https://tnvelaivaaippu.gov.in/என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவுசெய்ய விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.பதிவு செய்யும் போது அரசு விதித்துள்ள கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X