பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் ஐ.டி.ஐ., யில் மாணவர் சேர்க்கைஇம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார்-தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் நேரடி சேர்க்கைக்கு இம் மாதம் 30ம் தேதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில், கடலுார் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள சில இடங்களில் சேர 30ம் தேதி வரை நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி அரசு

கடலுார்-தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் நேரடி சேர்க்கைக்கு இம் மாதம் 30ம் தேதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில், கடலுார் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள சில இடங்களில் சேர 30ம் தேதி வரை நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய w.w.w.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம். அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இந்த இணையதள வழியிலான நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X