பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பு முக்கியம் கலெக்டர் சார்! புதுசா ஹாஸ்டல் கட்டிக்கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை, : சமூக நலத்துறையின் கீழ் வெளியூர் பெண்களுக்கான, அரசு மகளிர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நான்கு ஆண்டுகளாகியும், மாவட்ட வருவாய்த்துறையால் இடம் ஒதுக்கப்படாமல் உள்ளது. மாவட்ட சமூகநலத்துறையின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த கட்டணத்தில் அரசு, மகளிர் விடுதி நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பணிக்கு செல்லும் பெண்கள்


கோவை, : சமூக நலத்துறையின் கீழ் வெளியூர் பெண்களுக்கான, அரசு மகளிர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நான்கு ஆண்டுகளாகியும், மாவட்ட வருவாய்த்துறையால் இடம் ஒதுக்கப்படாமல் உள்ளது.

மாவட்ட சமூகநலத்துறையின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த கட்டணத்தில் அரசு, மகளிர் விடுதி நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பணிக்கு செல்லும் பெண்கள் சென்னையில், 300 ரூபாய், பிற மாவட்டங்களில், 200 ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்தி தங்கிக்கொள்ளலாம். உணவு, பராமரிப்பு செலவுகளை தங்கியிருப்போர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.கோவையில் பூமார்க்கெட் பகுதியில்,

இவ்விடுதி தற்போது செயல்படுகிறது. விடுதிக்காக சொந்தமாக கட்டடம் கட்டுவதற்கு, 2018ல் அரசு 1.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. முதலில், வெள்ளக்கிணறு பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பின்பு அவ்விடத்தில் சில குறைபாடுகள் இருந்ததால், நீண்ட இழுபறிக்கு பின்பு, துடியலுார் பகுதியில், 90 சென்ட் இடம் இறுதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை கட்டுமான பணி துவக்கப்படாமல் உள்ளது. இடம் ஒதுக்கீடு தொடர்பாக வருவாய்த்துறையின் உரிய ஒப்புதல் பெறுவதில் இழுபறி நிலவுவதால், இப்பணிகள் நிலுவையில் உள்ளன.கடந்த ஓராண்டில் கட்டுமான பொருட்களின் விலை கூடியிருப்பதால், மேலும் கூடுதல் நிதி அரசிடம் இருந்து கேட்டு பெறவேண்டிய சூழலும் இத்தாமதத்தால் ஏற்பட்டுள்ளது.மாவட்ட கலெக்டர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கட்டுமான பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், மகளிர் பலர் பயன்பெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X