பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

Added : அக் 14, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த கூளாப்பாடி கிராமத்தில் நெல் சாகுபடியில் உற்பத்தி திறனை பெருக்குவதற்கான நீர்வள நிலவள திட்ட பயிற்சி முகாம் நடந்தது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடந்த பயிற்சிக்கு நீர்வள நிலவள திட்ட உதவிப்பேராசிரியர் அரிசுதன் தலைமை தாங்கினார்.நெற் பயிருக்கான நீர் மேலாண்மை, ஊட்டச்சத்து

சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த கூளாப்பாடி கிராமத்தில் நெல் சாகுபடியில் உற்பத்தி திறனை பெருக்குவதற்கான நீர்வள நிலவள திட்ட பயிற்சி முகாம் நடந்தது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடந்த பயிற்சிக்கு நீர்வள நிலவள திட்ட உதவிப்பேராசிரியர் அரிசுதன் தலைமை தாங்கினார்.நெற் பயிருக்கான நீர் மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, உயிர் உரங்களின் முக்கியத்துவம் மற்றும் களை கட்டுப்பாடு பற்றி விளக்கினார். உதவி பேராசிரியர் ஜெயபிரபாவதி, நெல் பயிரை தாக்கும் பூச்சிகள், அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், உதவி பேராசிரியர் சங்கீதா நெற்பயிரை தாக்கும் நோய்கள், அதனை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் விளக்கினர்.பயிற்சியில் ஊராட்சி தலைவர் பரசுராமன், முன்னோடி விவசாயி நெடுஞ்சேரலாதன் உட்பட பலர் பங்கேற்றனர். விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். விவசாயிகளுக்கு வயல்வெளி செயல் விளக்க திடல் அமைத்திட வயல் நீர் குழாய் வழங்கப்பட்டது. இளநிலை ஆராய்ச்சியாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X