பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி பிரதிநிதிகள் விருதையில் கருத்தரங்கு

Added : அக் 14, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது.விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார், ஒன்றிய சேர்மன்கள் செல்லதுரை, மேனகா விஜயகுமார் முன்னிலை

விருத்தாசலம்-சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது.விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார், ஒன்றிய சேர்மன்கள் செல்லதுரை, மேனகா விஜயகுமார் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் செல்வி வரவேற்றார். திட்ட அலுவலர் சாய்ரா பானு, ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி ஆகியோர் திட்டம் குறித்து பேசினர்.அதில், ஊட்டச்சத்து குறைபாடு, தாய் சேய் மரணம் தவிர்த்தல், குழந்தை திருமணம் தவிர்த்தல், பள்ளி இடைநிற்றல், திறந்தவெளி கழிப்பறை இல்லாத ஊராட்சியாக மாற்றுவது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் நன்றி கூறினார். முன்னதாக, ஊட்டச்சத்து உள்ளிட்ட விழிப்புணர்வு அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டன.ஊராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், குழந்தைகள் மைய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X