2 நாளில், 20 டன் செவ்வந்தி பூ விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 நாளில், 20 டன் செவ்வந்தி பூ விற்பனை

Added : அக் 14, 2021
Share
திருப்பூர் : ஆயுதபூஜை பண்டிகை ஒட்டி திருப்பூர் பூ மார்க்கெட்டில் இரண்டு நாளில், 20 டன் செவ்வந்தி பூக்கள் விற்பனையானது.திருப்பூர் பூ மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு, 11 ம் தேதி முதல் செவ்வந்தி பூ வரத்து துவங்கியது. முதல் நாள், ஐந்து டன் பூக்கள் வந்த நிலையில், நேற்று முன்தினம், நேற்று, 20 டன் செவ்வந்தி பூக்கள் வந்தது.பண்டிகைக்கு முதல் நாளான நேற்று அதிகாலை முதலே பூ

திருப்பூர் : ஆயுதபூஜை பண்டிகை ஒட்டி திருப்பூர் பூ மார்க்கெட்டில் இரண்டு நாளில், 20 டன் செவ்வந்தி பூக்கள் விற்பனையானது.திருப்பூர் பூ மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு, 11 ம் தேதி முதல் செவ்வந்தி பூ வரத்து துவங்கியது. முதல் நாள், ஐந்து டன் பூக்கள் வந்த நிலையில், நேற்று முன்தினம், நேற்று, 20 டன் செவ்வந்தி பூக்கள் வந்தது.பண்டிகைக்கு முதல் நாளான நேற்று அதிகாலை முதலே பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

ஒருவரை ஒருவர் நெருக்கடியடித்த படி பூக்கள் வாங்க திரண்டனர். இதனால், இரு தினங்களுக்கு முன் கிலோ, 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட செவ்வந்தி நேற்று கிலோ, 200 முதல், 350 ரூபாய் என அதிகரித்தது.பெரும்பாலானோர் செவ்வந்தியே வாங்க முண்டியடித்ததால், நேற்று ஒரே நாளில், 15 டன் பூ விற்றது. இரு நாட்களில், 20 டன் செவ்வந்தி விற்று தீர்ந்ததாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.கடந்த வாரம் வாங்க ஆளில்லாததால் மல்லிகை கிலோ, 250 ரூபாய்க்கு விற்றது. நேற்று பெண்கள் பூ வாங்க குவிந்ததால் ஒரு கிலோ மல்லிகை பூ, ஆயிரம் முதல், 1,400 ரூபாய் வரையும், முல்லை, 400 முதல், 600 மற்றும் அரளி, 350 முதல், 400 ரூபாய்க்கும் விற்றது. துளசிக்கு கடும் கிராக்கி நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X