தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு டாக்டர் வேண்டும்

Added : அக் 14, 2021
Share
Advertisement
தொண்டாமுத்துார் பகுதிக்கு அவசரம்தொண்டாமுத்தூர், அக்.14--இரவு நேர டாக்டர் பணியிடம் நிரப்பப்படாததால், தொண்டாமுத்துார் சுற்று வட்டார பகுதிகளில் விபத்து, பாம்புக்கடி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோர் உயிரிழந்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு, இந்த ஆட்சியிலாவது, இரவு நேர டாக்டர் நியமிக்கப்படுவார்களா என, கோரிக்கை எழுந்துள்ளது.தொண்டாமுத்தூர் அரசு
 அரசு மருத்துவமனைக்கு  டாக்டர்  வேண்டும்

தொண்டாமுத்துார் பகுதிக்கு அவசரம்தொண்டாமுத்தூர், அக்.14--இரவு நேர டாக்டர் பணியிடம் நிரப்பப்படாததால், தொண்டாமுத்துார் சுற்று வட்டார பகுதிகளில் விபத்து, பாம்புக்கடி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோர் உயிரிழந்து வருகின்றனர்.

தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு, இந்த ஆட்சியிலாவது, இரவு நேர டாக்டர் நியமிக்கப்படுவார்களா என, கோரிக்கை எழுந்துள்ளது.தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை, நூற்றாண்டு பழமை வாய்ந்தது. சுற்றுவட்டாரத்தில் உள்ள, 80க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாள்தோறும், சராசரியாக, 450 பேர் புறநோயாளிகளாகவும், 50 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்பகுதி, கிராமப்புற பகுதி என்பதால், இரவு நேரங்களில் பாம்பு கடி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி, சாலை விபத்துகளில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில், பலரும் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.ஆனால், இரவு நேர டாக்டர் இல்லாததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை, கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில், 20 கி.மீ., தொலைவில் உள்ள, கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, பலரும் உயிரிழக்கும் நிலை உள்ளது.இதனால், தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு, இரவு நேர டாக்டர் நியமிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.கடந்த ஆட்சியில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், 2019ம் ஆண்டு, கோவை வந்தபோது, தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைவில் இரவு நேர டாக்டர் நியமிக்கப்படுவார் என, தெரிவித்து சென்றார்.

அதன்பின், 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், டாக்டர் நியமிக்கப்படவில்லை. தற்போதுள்ள ஆட்சியிலாவது, தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு, இரவு நேர டாக்டர் நியமித்து, இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X