பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கை பெற்று வரும் கடலுார் ராஜேஸ்வரி சிட்பண்ட் நிறுவனம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சேலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து சேகோ பேக்டரி வைத்து நடத்தி வந்த லயன் சண்முகம் கடலுாரில் துவங்கியுள்ள ஸ்ரீராமஜெயம் அன்டு ஸ்ரீராம விலாஸ் பஸ் போக்குவரத்தை நிறுவனம் துவக்கி பல தொழிலாளர்களுக்கு வேவைாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தார். 40 ஆண்டுகளாக மக்கள் சேவையில் போக்குவரத்து பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிற இந்நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமாக கடந்த 10

சேலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து சேகோ பேக்டரி வைத்து நடத்தி வந்த லயன் சண்முகம் கடலுாரில் துவங்கியுள்ள ஸ்ரீராமஜெயம் அன்டு ஸ்ரீராம விலாஸ் பஸ் போக்குவரத்தை நிறுவனம் துவக்கி பல தொழிலாளர்களுக்கு வேவைாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தார். 40 ஆண்டுகளாக மக்கள் சேவையில் போக்குவரத்து பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிற இந்நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமாக கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கை ராஜேஸ்வரி சிட்பண்ட் மற்றும் ராஜேஸ்வரி பைனான்ஸ் இயங்கி வருகிறது.இதுகுறித்து உரிமையாளர் சண்முகம் கூறியதாவது: கடலுார் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அரசு அலுவலர்கள், வியாபாரிகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் வரை சீட்டு திட்டம் உள்ளது. ராஜேஸ்வரி சிட்பண்டில் வைத்துள்ள தொகைகள் தேவைக்கு ஏற்ப நற்காரியங்களுக்கு பயன்படும்.மாதாந்திர திட்டத்தில் பயன் பெற உரிய ஆவணங்கள் பெற்று மறுநாளே பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. பணத் தேவைக்காக சீட்டு எடுக்கும் பொழுது உடனடியாக பணம் பெறுவதும் வழங்குவதும் ஒரு நேர்மையான தொழில் சார்ந்த விருத்தியாகும். அதை இந்நிறுவனம் முழுமையாக செய்கிறது. முதலீடாக இருந்தாலும் கடனுதவியாக இருந்தாலும் இந்த சீட்டு திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்ற கடன்களுக்கு வட்டி செலுத்த முடியாமல் பாதிக்கின்றனர். இவர்களை நல்வழிப் படுத்துவது தான் இந்நிறுவனத்தின் நோக்கம். கடலுார் அரிமா சங்கம், பஸ் உரிமையாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்து கல்விப்பணி, மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் அன்னதானம் வழங்கியுள்ளோம். சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ளோம். லாபம் மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X