கடலுார் மாவட்டத்தில்பரவலாக மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில்பரவலாக மழை

Added : அக் 14, 2021
Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடைவிடாது மழை பெய்தது.தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டது.அதன்படி கடலுார் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கடலுார் மாவட்டம் முழுவதும்

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடைவிடாது மழை பெய்தது.தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டது.அதன்படி கடலுார் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கடலுார் மாவட்டம் முழுவதும் இடைவிடாது மழை பெய்தது.நேற்று காலை 8:30 மணி வரையில் கடலுாரில் 19.4 மி.மீட்டர் மழை பதிவாகியது. லக்கூர்19.2, வேப்பூர் 17, கலெக்டர் அலுவலகம் 16.9, காட்டுமயிலுார் 15, பரங்கிப்பேட்டை14.2, தொழுதுார் 12, மே மாத்துார் 8, குறிஞ்சிப்பாடி 7, கொத்தாச்சேரி 6, விருத்தாசலம் 5.4, ஸ்ரீமுஷ்ணம் 5.1, சிதம்பரம் 4.4, அண்ணாமலைநகர் 4.2, சேத்தியாத்தோப்பு 4, புவனகிரி 5, பெலாந்துரை 3.8, கீழ்செருவாய் 3, குப்பநத்தம், 2.8, காட்டுமன்னார்கோவில் 2.2, லால்பேட்டை, வானமாதேவி, வடக்குத்து 2, பண்ருட்டி 1 என, சராசரியாக 7.26 மீ.மீட்டர் மழை பதிவாகியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X