பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி மலர் -8

Added : அக் 14, 2021
Share
Advertisement
உள்ளாட்சியின் சிறப்பே, ஜனநாயக மலர்ச்சி!''சுதந்திரம் என்பது கீழ்மட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமமும் முழு சுதந்திரம் கொண்ட சிறிய குடியரசாகத் திகழ வேண்டும். பஞ்சாயத்துகளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகாரம் அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு நன்மைகள் விளையும். உண்மையில் நான் காண விரும்பும் ராம ராஜ்யம் என்பது கிராம ராஜ்யமே! ஒவ்வொரு கிராமமும்

உள்ளாட்சியின் சிறப்பே, ஜனநாயக மலர்ச்சி!''சுதந்திரம் என்பது கீழ்மட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமமும் முழு சுதந்திரம் கொண்ட சிறிய குடியரசாகத் திகழ வேண்டும்.
பஞ்சாயத்துகளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகாரம் அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு நன்மைகள் விளையும். உண்மையில் நான் காண விரும்பும் ராம ராஜ்யம் என்பது கிராம ராஜ்யமே! ஒவ்வொரு கிராமமும் அனேகமாக வெளியிலிருந்து எதையும் எதிர்பார்க்காத, சுயசார்பு நிலைமைக்கு மேம்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.'' என்று சொல்கிறார் மகாத்மா காந்தி.மன்னராட்சி காலங்களில் விவசாயிகளின், கைவினைஞர்களின் வரியைக் கொண்டுதான் அரசாங்கங்களே செயல்பட்டன.

சோழர்களின் குடவோலைமுறை உள்ளாட்சி தேர்தல் குறித்த தகவல்கள், அன்றே தமிழ் சமூகம் உள்ளாட்சியில் நல்லாட்சியை கொண்டிருந்தது என்று கூறலாம்.உலகம் முழுவதிலுமே ஒரு நல்ல ஜனநாயகத்திற்கான மதிப்பீட்டிற்கு உள்ளாட்சியின் சிறப்பே அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜமீன்முறை, ராயத்துவாரி முறை, மஹல்வாரி முறை, இனாம்தார் முறை ஆகியவற்றை புகுத்தி, விவசாயிகளை கசக்கி பிழியும் வரிமுறைகளை அமல்படுத்தி உள்ளாட்சிகளையே சீர்குலைத்தனர்.

இந்தியாவின் வைஸ்ராயாக ரிப்பன்பிரபு பதவி வகித்தபோது, உள்ளாட்சிகளுக்கு ஓரளவு புத்துயிர் கொடுத்தார்.நமது ஜனநாயகம் என்பது மூன்றடுக்கு அதிகார முறையைக் கொண்டது. முதலாவது மத்திய அரசு, இரண்டாவது மாநில அரசு, மூன்றாவது உள்ளாட்சி அமைப்புகள்! இதில் மூன்றாவதான உள்ளாட்சியே உண்மையிலேயே அதிக மக்கள் பங்களிப்புடன் நடைபெறும் ஜனநாயக முறையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X